சர்ச்சையில் சிக்கிய சூர்யாவின் "கருப்பு".... அதிர்ச்சியில் படக்குழு அறிக்கை!
கருப்பு திரைப்படம்:
ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தான் "கருப்பு" இந்த திரைப்படம் வெளியாவதில் ரிலீஸ் பிரச்சனை ஏற்பட்டு படக்குழுவினருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது .
பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிய கருப்பு திரைப்படம் வெளியாவதில் தாமதமானாலும் படம் வெளியாகி மூன்றே நாளில் ரூ.147 கோடி வசூலீட்டி மாபெரும் சாதனை படைத்தது. இதனால் படக்குழுவினரின் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துப்போனார்கள்.

தயாரிப்பு நிறுவனம் அறிக்கை:
இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த திரைப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதுகுறித்து தற்போது அதிரடி அறிக்கை ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறார்கள் .
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு... கருப்பு திரைப்படத்தில் தங்கள் பெயரை பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.
50 வருடங்களுக்கு மேலாக இசையுலகை ஆட்சி செய்யும் இசை அரசனை காயப்படுத்து என்ற எண்ணமோ களங்கப்படுத்தும் எண்ணமோ பட குழுவிற்கு சிறிதும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்டது தான் இக்காட்சி.
சர்ச்சையில் கருப்பு படம்:

ஆனால், தாங்களோ தங்களை சார்ந்தவர்களோ, இசைஞானி ரசிகர்களோ, பிறரோ மனம் புண்பட்டிருந்தால் அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து இதுவரை இசைஞானி இளையராஜா எந்த ஒரு முரண்பாடான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது தவறை உணர்ந்த படக்குழு தாமாக முன்வந்து மன்னிப்பு அறிக்கை வெளியிட்டு இருப்பது மரியாதைத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
