Categories: Cinema News latest news

தன்னுடைய குருநாதருக்கு கல்தா.! சூர்யாவின் மாஸ்டர் பிளான்.! ஆனால், அவர்கிட்ட சிக்கிடீங்களே சார்.?!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டேர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலாவின் கூட்டணிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணையும் படம் தான் வணங்கான்.சொல்ல போனால், இயக்குனர் பாலா சூர்யாவிற்கு  குரு என்றே சொல்லலாம்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கன்யாகுமரியில் நடந்து முடிந்தது. இந்த படத்தின் முதல் செட்யூலை முடித்த சூர்யா ஒரு சிறிய விடுமுறையை தனது குடும்பத்துடன் கொண்டாடி விட்டு அண்மையில் சென்னை திரும்பினார். தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கவதற்கு சென்ற சூர்யாவுக்கு அதற்கான கதை இன்னும் ரெடியாகவில்லை என்று சூர்யாவிடம் பாலா கூற… உடனே, சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டு நீங்க கதையை தயார் செய்துவிட்டு எனக்கு அழைப்பு விடுங்கள், அதன் பிறகு நான் வந்து நடிக்கிறேன்.

இதையும் படிங்களேன் – சியான் எடுத்த அதிரடி முடிவு.. இதுதான் உண்மையான காரணம்.! வீடியோவில் உளறிய விக்ரம்.!

இப்பொது, சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் செய்ய சூர்யா முடிவு செய்துவுள்ளார். இந்நிலையில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த புது படத்தின் பூஜை வரும் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பூஜை முடிந்த மறுநாள் அதாவது வருகின்றன 22-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு  தொடங்கப்படும் என்றும் இணையத்தில் ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே சிறுத்தை சிவா, ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கி தோல்வி அடைந்தார். ஒரே பார்முலாவே பாலோ செய்யும் சிவா படத்தில் இப்படி நடிக்க போறீங்க சார்… என இவரது ரசிகர்கள் வருத்தத்துடன் காத்திருக்கிறார்கள்.

Manikandan
Published by
Manikandan