டிஎஸ்பி இன்பராஜ் வேட்டையாடுறாரே!.. ‘சீன்’ சூர்யா க்ளிம்ப்ஸ் இத்தனை மில்லியன் வியூஸா?..

 
scene

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. இதுவரை 6 மில்லியன் வியூஸை யூடியூபில் கடந்து டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நஸ்ரியா நசிம், நஸ்லன், லால், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். 

சீன் கிளிம்ஸ் வீடியோவில், கொரோனா காலத்தில் நடக்கும் கொலைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு விசாரணை நடைபெறுகிறது. இதில் சூர்யாவின் தோற்றம், அவரது விசாரணை செய்யும் விதம் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, வீடியோவில் வரும் ரெஸ்பெக்டா பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூர்யா தொடர்ந்து கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்தப் படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Tags

From Around the web