×

சூர்யாவின் ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டி... ப்பாஹ் இவ்ளோவ் ஜாலி டைப்பா இவரு..?

நடிகர் சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் சீரியசான சண்டை காட்சியில் நடத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், காட்சியில் வில்லனை அடித்துவிட்டு ஜாலியாக ஆட்டம் போடுகிறார்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யா பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இயக்குனராக திரைத்துறையில் நுழையும் பலருக்கும் இன்று கனவு நாயகனாக முன்னிற்கிறார் சூர்யா. அந்தவகையில் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் ’சூரரைப்போற்று’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது.

சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில்  அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர். இந்நிலையில் இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ காட்சி மாசு என்கிற மாசிலாமணி படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. இதனை கண்ட அவரது ரசிகர்கள் அண்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவ்வளவு ஜாலியாக இருப்பாரா..? என வியப்புடன் ரசித்து வருகின்றனர்.

View this post on Instagram

Guess the movie !?

A post shared by Suriya (@suriyasivakumarofficial) on

From around the web

Trending Videos

Tamilnadu News