Categories: Cinema News latest news throwback stories

சூர்யவம்சம் படத்தில் தேவயானி வேண்டாம்… இந்த நடிகை தான் வேணும்.. அடம் செய்த சரத்குமார்… ஆஃப் செய்த தயாரிப்பாளர்..!

Sarathkumar: தமிழ் சினிமாவில் வயசானாலும் இளமையோட இருக்கும் ஒரு சில நடிகர்களில் சரத்குமார் தான் முக்கிய இடம் பிடிப்பார். சில வருடங்களாகவே அவர் ஒரே மாதிரியாகவே இருந்து வருகிறார். இப்போதே நிறைய ட்ரோல் செய்யப்படும் அவர் இளமையில் நிறைய சேட்டை செய்து இருக்காராம்.

மிஸ்டர் மெட்ராஸாக இருந்தவர் சரத்குமார். சினிமாவில் ஆரம்பத்தில் வருவதற்கு முன்னர் பெங்களூரில் இருந்த பெரிய பத்திரிக்கை அலுவலகத்தில் பத்திரிக்கையாளராக இருந்தார். அங்கு இருக்கும் போதே வரலட்சுமி தாயை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் இரண்டு பெண்களுடன் சென்னைக்கு திரும்புகின்றனர்.

இதையும் படிங்க: மாட்டிக்க இருந்த மனோஜ்… செம பில்டப்பில் தப்பிச்சிட்டாரே..! ரசிகர்களை ஏமாத்துறீங்க டைரக்டரே..!

சினிமாவில் முதலில் கார்த்திக்கை வைத்து கண் சிமிட்டும் நேரம் படத்தினை தயாரித்தார். அப்படம் பெரிய வசூல் பெறவில்லை. இதனால் நடிப்புக்குள் சரத்குமார் வந்தார். அதை தொடர்ந்து இவர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் புரியாத புதிர் படத்தில் நடித்தார். அந்த படம் நல்ல ரீச் கொடுக்க நிறைய பட வாய்ப்புகள் வந்தது.

வில்லனாக நிறைய படத்தில் நடித்தார். அதிலிருந்து அவரின் சினிமா கேரியர் மிகப்பெரிய உச்சத்தினை பெறுகிறது. தொடர்ந்து ஹீரோவாகவும் நடிக்க நாட்டாமை, சூர்யவம்சம், சேரன் பாண்டியன் படங்களும் ஹிட் அடிக்கிறது. இதனால் சரத்குமார் அப்போதைய காலத்தில் கோலிவுட்டின் முக்கிய ஸ்டாராக இருந்தார்.

ஆனால் அவருக்கு நடிகைகளுடன் நெருக்கம் அதிகமாம். அதன்படி ஹீரா மற்றும் நக்மாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஹீரா, அஜித்துடன் நெருங்கி நடித்ததுக்கே நிறைய சண்டை போட்டு இருக்கிறார். இதேப்போல நக்மாவிடமும் மற்ற ஹீரோகளிடன் நெருங்கி நடிக்க கூடாது என சண்டை போட்டாராம்.

இதையும் படிங்க: அயலானில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் அல்ல அந்த நடிகருக்கும் சம்பளம் இல்லயாம்.!

அப்போ மீதி 18 லட்சத்தினை நீங்க கொடுக்கிறீங்களா? என கேட்டு விட்டாராம். அதை கேட்டு ஷாக்கான சரத்குமார் சத்தமே இல்லாமல் அந்த இடத்தினை காலி செய்ததாக பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தெரிவித்து இருக்கிறார். சரத்குமாரின் இந்த சேட்டை தற்போதைய இணையத்தின் வைரல் செய்தியாக வலம் வருகிறதாம்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily