×

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார் - மாமா பரபரப்பு பேட்டி

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை மதியம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவரது இறப்பு திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில், சுஷாந்தின் மாமா ( சகோதரியின் கணவர்) ஓ.பி சிங், சுஷாந்தின்  மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதுபோல் தெரிகிறது.  பெரும் சந்தேகமாகவும் இருக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை வேண்டும். சுஷாந்த் நிச்சயம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என அவர் கூறியிருக்கிறார்.

மேலும், ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,  சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். வீட்டில்  சமையற்காரர்கள் இருவரும், வீட்டு வேலை செய்யும் நபர் ஒருவர், அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருக்கும் போது எப்படி தற்கொலை செய்வார்...? என்பதே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News