×

மகனின் மரணத்தால் சுஷாந்த் சிங் தந்தை கவலைக்கிடம்..!

பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் திடீரென நேற்று  தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

அவரது மரணச்செய்தியை கேட்டு அவரது தந்தை கிருஷ்ணகுமார் உடனே மயங்கி விழுந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஒருசில வாரங்களுக்கு முன்னர்தான் சுஷாந்த்சிங் பீகாரில் உள்ள தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் இருந்துள்ளதாகவும் அப்போது அவர் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் அவர் எந்தவித மன அழுத்தமும் இன்றி சந்தோசமாக இருந்ததாக சுஷாந்த்சிங் குடும்பத்தினர் தெரிவித்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News