×

சுஷாந்த் சிங் தற்கொலை: பாலிவுட்டை தாக்கிய ஏ.ஆர் ரஹ்மான்!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்று காலை மதியம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவரது இறப்பு திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சினிமா பின்புலம் ஏதுமின்றி சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கான், கபூர் ,சிங் உள்ளிட்ட நட்சத்திர குடும்பங்களுக்கு ஈடாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏறிக்கொள்ள முடியாத பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் அவரை ஒன்று சேர்ந்து ஒதுக்கியுள்ளனர்.

இதனால் அவர் கடந்த ஒரு வருட காலமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தகவல்கள் கூறுகிறது. ஒருகட்டத்தில் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துள்ளார் . இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி கங்கனா ரனாவத், டாப்ஸி உள்ளிட்டோர் நட்சத்திர நடிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சுஷாந்த் சிங் மரணம் குறித்து 'உங்களுக்கு இந்த இடமாவது நல்ல இடமாக அமையட்டும்' என மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News