×

சுஷாந்த் முன்னாள் காதலி ரியா கைது! போதைப் பொருட்களை வாங்கி விநியோகித்தாரா?

சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கில் அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கில் அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுஷாந்த் தற்கொலை பின்னணியில் அவரது முன்னாள் காதலி ரியா இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலிஸில் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையில் ரியா வாட்ஸ் ஆப் உரையாடல்களை ஆராய்ந்ததில் அவருக்கு போதைப் பொருள் விற்பவர்களோடு சம்மந்தம் உள்ளது எனக் கண்டறியப்பட்டடது.

இது சம்மந்தமான விசாரணையில் அவர் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மேல் போதைப் பொருள் வாங்கியது மற்றும் விநியோகித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரியாவுக்கு ஆதரவாக பேசி வந்த நடிகை டாப்ஸி இப்போது இந்த கைது குறித்து ‘ரியா சுஷாந்துக்காக போதைப் பொருள் வாங்கியதாகதான் கைது செய்யப்பட்டுள்ளார். சுஷாந்த் இப்போது இருந்திருந்தால் அவரும் கைது செய்யப்பட்டு இருப்பார். சுஷாந்த் ரியாவிடம் போதை பொருள் கேட்டு வற்புறுத்தி இருக்கலாம். அல்லது ரியா சுஷாந்தை போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாக்கி இருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News