×

நண்பனுக்கு கொரோனாவா என்று சந்தேகம்… ஓடோடி சென்ற விஜய்!

தனது நண்பரான சஞ்சீவ் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்று தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் அவருக்காக விஜய் தானே சாப்பாடு எடுத்து சென்று கொடுத்துள்ளார்.

 

தனது நண்பரான சஞ்சீவ் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்று தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் அவருக்காக விஜய் தானே சாப்பாடு எடுத்து சென்று கொடுத்துள்ளார்.

திரையுலகில் நடிகர் விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்றால் அது சின்னத்திரை நாயகன் சஞ்சீவ்தான். இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் நண்பர்கள் தினத்தில் கூட விஜய் ஆன்லைன் மூலமாக பேசிய நண்பர்களில் சஞ்சீவும் ஒருவர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட கொரோனா தாக்கிவிட்டதோ என பயந்த சஞ்சீவ், தனது குடும்பத்தினரை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதையறிந்த விஜய் அவரிடம் பேசி சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு சஞ்சீவ் தயங்கி பேச உடனடியாக தனது வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துச் சென்று கொடுத்துள்ளார் விஜய். இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார் விஜய்.

From around the web

Trending Videos

Tamilnadu News