Connect with us

Cinema News

ஷூட்டிங்கிற்கு மட்டம் போட்ட எஸ்.வி.ரங்காராவ்.. கேள்வி கேட்க வந்த தயாரிப்பாளரையே வாயடைக்க வந்த பின்னணி….

எஸ்.வி.ரங்காராவ் என்ற பெயருக்கே தமிழ் சினிமாவில் தனி மரியாதை உண்டு. அவரை பார்த்து பயம் என்று சொல்வதை விட அவரின் மிடுக்கின் மீது சினிமாவில் இருப்போருக்கு தனி மரியாதை என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட, ரங்காராவிடம் இருக்கும் பெரிய கெட்ட பழக்கம் அவரால் குறித்த நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வர முடியாது என்பதே.

சில நேரம் தாமதாக வந்தால் பரவா இல்லை. எப்போதும் தாமதம் தான். அதிலும், சில படங்களில் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே நடித்து கொடுப்பார். இப்படி இம்சை செய்து கூட அவரின் நடிப்பால் தான் தமிழ் சினிமா அவரை தாங்கியது.

எஸ்.வி.ரங்காராவ்

ரங்காராவின் குணமும் அப்படி தான். தனக்கு வேண்டியதை சொல்லும்படி சொல்லி விடுவார். தவறு செய்து விட்டீர்கள் என யாரும் கூறினால் அதற்கு அமைதியும் காப்பார். அப்படி ஒரு சம்பவம் தான் பக்த பிரகலாதா என்ற படத்தில் நடந்து இருக்கிறது. ஏவி.எம். தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்பில் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்கு மேல் இருக்க மாட்டார். இவரிடம் கேள்வி கேட்க அங்கு யாருக்கும் தைரியம் இல்லை. இதை படத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியாரிடம் எடுத்து சென்றனர்.

இதையும் படிங்க: காரைக்குடியில் தொடங்கிய ஏவிஎம் ஸ்டூடியோ… வடபழனிக்கு வந்தது எப்படி..? 10 ஏக்கர் நிலத்தின் சுவாரஸ்ய பின்னணி…

 

அவரும் அடுத்த நாள் ஷூட்டிங்கில் நேரில் ரங்காராவிடம் இதுகுறித்து கேட்க முடிவெடுத்தார். அதுப்போல, ஷூட்டிங்கில் மெய்யப்ப செட்டியாரை பார்த்த ரங்காராவும் அவரிடம் பேசத்தான் வந்திருக்கிறார் என்பதை கண்டுக்கொண்டார். ஆனால் கண்டுக்கொள்ளாமல் தனது அறைக்கு சென்று அவரின் ஆபரணங்களை கழட்டினார். அப்போது அவர் போட்டு இருந்த கிரீடத்தினை மெய்யப்ப செட்டியாரிடம் கொடுத்து, தயாரிப்பாளரே இதை பிடிங்க என்றாராம். அதை வாங்கியவர் என்ன இவ்வளோ கனமா இருக்கு. எப்படி இதை போட்டு நடிக்கிறீங்க எனக் கேள்வி எழுப்பினார்.

எஸ்.வி.ரங்காராவ்

தான் செய்ய வேண்டிய காரியத்தை சரியாக முடித்த ரங்காராவ் மனதில் மகிழ்ச்சி கொண்டார். தொடர்ந்து, சரி இப்போது நீங்களே சொல்லுங்கள், இத்துணை கனமான ஆபரணங்களை அணிந்து என்னால் எவ்வளவு நேரம் நடிக்க முடியும்..? வீட்டுக்கு போனால் கூட இதனால் ஏற்பட்ட வலி தீரவே இரண்டு மணி நேரம் ஆகிறது” என்றார் ரங்காராவ். ஒரு நடிகனாக அவர் படும் கஷ்டத்தினை உடனே மெய்யப்ப செட்டியார் புரிந்து கொண்டார். உங்களால் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் நடியுங்கள் போதும்” என அனுமதி கொடுத்து சென்றாராம்.

Continue Reading

More in Cinema News

To Top