
Cinema News
கேரவானில் சிக்கன் சாப்பிடுபவருக்கு மக்களை பத்தி என்ன தெரியும்?.. விஜயை விளாசும் பிரபலம்!…
TVK Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி தற்போது முழு நேர அரசியல்வாதியாகவும் மாறி இருக்கிறார். இவரின் முதல் கட்சி மாநாடு விழுப்புரம் பகுதியில் நடந்தது. அடுத்த மாநாடு மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் வரை கூடினார்கள். விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வருகிற டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். இதற்கு முன் பனையூரில் இருந்து மட்டுமே அவர் அரசியல் செய்கிறார் என என்கிற விமர்சனம் அவர் மீது இருந்த நிலையில் தற்போது அவர் வெளியே வர துவங்கியிருக்கிறார். அதிலும் ஆளும் கட்சியான திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். எனவே அவரின் அரசியல் செயல்பாடுகளை பலரும் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக நாம் தமிழர் மற்றும் திமுக போன்ற கட்சிகள் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில்தான் நேற்று தமிழக அரசு சார்பாக கல்வி தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கல்வி எவ்வளவு முக்கியம் மற்றும் தமிழக அரசு பள்ளிகளில் காலை மற்றும் மதியம் இரண்டு வேளைகளிலும் அரசு தரப்பில் இலவச உணவு கொடுப்பது பற்றியும் பலரும் பாராட்டி பேசினார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்வி சேகர் ‘கேரவானில் அமர்ந்து கொண்டு சிக்கன் சாப்பிடுபவருக்கு குழந்தைகளுக்கு பசியாற்றும் காலை, மதிய உணவுத் திட்டங்கள் பற்றி தெரியாது. முதலில் விஜய் கார் வரியை ஒழுங்காக கட்டட்டும். குடும்ப அரசியல் பற்றி பிறகு பேசட்டும். சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் பற்றி பேசக்கூடாது’ என அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.