×

விட்டா ரஜினிய ஊட்டிவிட சொல்வாங்க போலிருக்கு – எஸ்.வி.சேகர் பதிலடி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்ததை விமர்சனம் செய்த இயக்குனர் விக்ரமனுக்கு எஸ் வி சேகர் பதிலளித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் சினிமாவில் தினக்கூலிகளாக வேலைப்பார்க்கும் 15,000 தொழிலாளிகள் இதனால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு உதவி செய்யுமாறும் முன்னணி நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் ஃபெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி.

இதையடுத்து பல நடிகர்களும் உதவி செய்ய ரஜினிகாந்த் தன் பங்கிற்கு 50 லட்ச ரூபாய் கொடுத்தார். இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் கௌதமன், ‘ரஜினி பணமாகக் கொடுத்ததற்குப் பதில் மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்திருக்கலாம்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கௌதமனுக்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் எஸ் வி சேகர் ‘கௌதமன் ரஜினியை விமர்சனம் செய்து பிரபலம் ஆகலாம் என்று பார்க்கிறார். ஆனால் அது நடக்காது. விட்டால் ரஜினியை ஊட்டி விட சொல்வார்கள் போல’ என நக்கலாக பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News