×

கிஸ் அடிச்சிட்டு தற்கொலை பண்ணிகிட்ட ஒரே நடிகை நீங்கதான்.. ரேகாவை  கலாய்த்த சுரேஷ்....

 

தற்போது துவங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி எல்லோருடனும் மோதல் போக்கை கடை பிடித்து வருகின்றனர். அவர் பேசும் விதம் கோபத்தை ஏற்படுத்துவதால் அவருடன் மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டு வருகின்றனர். 

நிகழ்ச்சி துவங்கி 2 நாட்களிலேயே அவருக்கும் அனிதா சம்பத்துக்கும் இடையே முட்டிக்கொண்டது. அதன்பின் சனம் ஷெட்டி, ரியோ ராஜ், வேல் முருகன் என எல்லோருடன் அவர் சண்டை போட்டு வருகிறார். இது தொடர்பான புரமோ வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில், நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் ரேகாவுடன் சுரேஷ் பேசும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் சுரேஷ் ‘கமலுடன் முத்தகாட்சிகளில் நடித்த நடிகைகளில் உங்களுக்கு இருக்கும் பெருமை யாருக்கும் இல்லை. என்ன தெரியுமா?’ என கேட்க, ரேகா பதில் தெரியாமல் முழிக்க ‘ கிஸ் பண்ணிவிட்டு தற்கொலை செய்து கொண்டது நீங்கள் மட்டும்தான்’ எனக்கூறி சிரித்தார். அதாவது புன்னகை மன்னன் காட்சியை நினைவுபத்தி அப்படி அவர் கிண்டலடித்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள எஸ்.வி.சேகர் ‘சுரேஷ் சக்ரவர்த்திக்கு இருக்கும் SENSE  OF HUMOUR அசாத்தியம்.  இவர் யாரை கலாய்க்கிறார் கண்டு பிடிங்க. ’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News