பாலியர் தொல்லை கொடுத்தது இவரா? வாய் திறந்த பாடகி ஸ்வாகதா!

 
பாலியர் தொல்லை கொடுத்தது இவரா? வாய் திறந்த பாடகி ஸ்வாகதா!

பிரபல பாடகி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துக்கொண்ட மாயாவின் அக்கா சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி வைரலான நிலையில் அவர் கொடுத்திருக்கும் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு புகழ்பெற்றவர் மாயா. இவர் தன்னுடைய சீசனில் ஆண் போட்டியாளர்களை விட அதிக ஆதிக்கம் செலுத்தி பெரிய அளவில் புகழ் பெற்றார். இவரின் அக்கா ஸ்வாகதா. இவரும் தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்தார். 

ஆனால் இவர் தற்போது ரிஷிகேஷில் சிறுதொழில் செய்து வருகிறார். இது குறித்தான ஒரு பேட்டியில் அவர் பேசிய போது தான் கோலிவுட்டில் வேலை செய்து வந்த இசையமைப்பாளர் என்னை கொடுமையாக பாலியல் சீண்டல் செய்தார். 

அது மிகவும் கொடூரமாக இருந்தது. அந்த கஷ்டத்தில் இருந்து தப்பித்து தான் இங்கு வந்தேன் என பேசியது கோலிவுட்டில் கலவரத்தை கிளப்பியது. யாராக இருக்கும் என பலரும் வதந்திகளை வெளியிட்டு வந்தனர். ஆனால் ஸ்வாகதா எதுவும் பேசாமல் இருந்து வந்தார். 

இந்நிலையில் பலகட்ட பேச்சு சமூகவலைத்தளத்தில் எழுந்து இருக்கும் நிலையில் ஸ்வாகதா தனது இன்ஸ்டா பதிவில், பல ஆண்டுகளாக தனக்கு இருந்த வேதனையை சமாளிக்க அமைதியாகவும், பொறுமையாகவும் முயற்சி செய்தேன். அந்த காயங்களில் இருந்து தேவியின் அருளால் மெல்ல மீண்டு வந்தேன்.

தற்போது என்னுள் அசைக்க முடியாத தைரியம் இருக்கிறது. அதனால் ஒரு முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன். பாவிகளை அழிக்க மகிஷாசுரமர்தனம் என பெயர் ஈட்டு இருக்கிறேன். அவளுடைய ஆட்டம் கொடூரமாகவும், நினைத்து பார்க்க முடியாத அளவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். 

பாலியர் தொல்லை கொடுத்தது இவரா? வாய் திறந்த பாடகி ஸ்வாகதா!

இதை தொடர்ந்து அவர் பெயர் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் நான் அந்த பெயரை நீங்கள் கேட்பதால் சொல்லிவிடலாம். அவதூறு வழக்கு பதியப்பட்டால் கேஸுக்கு நீங்க செலவு செய்கிறீர்களா? இப்படி ஒரு கேஸை அவதூறு வழக்காக மாற்ற நான் லூசு இல்ல. என்னுடைய பாலியல் தொல்லை வழக்கிற்கு என்ன தேவையோ அதை தான் செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web