×

ஆண்குயின் கீர்த்தி... ஆம்பள த்ரிஷா..  ஸ்வீட் பேபி சிம்பு - இணையத்தை கலக்கும் பேஸ் ஆப்!

கடந்த சில நாட்களாகவே ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும் பாலினத்தை மாற்றி காண்பிக்கும் ஃபேஸ் ஆப் இணையத்தில் செம பேமஸ் ஆகி வருகிறது. இந்த ஆப்பின் மூலம் நிஜ பெண்களை விட பெண்ணாக மாறிய ஆண்கள் தான் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்ற கருத்தெல்லாம் நிலவி வருகிறது.

 

பொதுவாகவே சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு விஷயம் வைரலாகி உலகம் முழுக்க சுமார் ஒரு  வாரத்திற்கு மேல் அதை பற்றியே பேசப்படுவதெல்லாம் வழக்கமான ஒன்று தான். அந்தவகையில் கடந்த சில நாட்களாகவே பேஸ் ஆப் சேலஞ் சமூகவலைத்தளம் முழுக்க ட்ரெண்டாகி  இந்த கொரோனா ஊரடங்கில் இளசுகளுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்துள்ளது.

அந்தவகையில் நடிகை ஹாரத்தி, சிம்பு,  த்ரிஷா, ஆல்யா மானசா , மணிமேகலை உள்ளிட்ட பிரபலங்களின் பாலின மாற்று புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில்  தற்ப்போது கீர்த்தி சுரேஷ் பெண்குயின் திரைப்பட போஸ்டரை பேஸ் ஆப் மூலம் ஆணாக மாற்றி "ஆண்குயின்" டைட்டில் போட்டு வைராக்கியுள்ளார். இதில் ஆண் கீர்த்தி பெண் கீர்த்தியைவிட அழகாக இருப்பதாக வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

From around the web

Trending Videos

Tamilnadu News