உங்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் சிறப்பானது- தனுஷுக்கு வாழ்த்து கூறிய ஸ்வேதா மோகன்

துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, காதல் கொண்டேன்
 
swetha menon

துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, காதல் கொண்டேன், அசுரன் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.  தனுஷ் நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் தன் பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.  போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் குவிந்த  ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகியான ஸ்வேதா மோகன், நடிகர் தனுஷுக்குத் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் மிகவும்  வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

dhanush

நடிகர் தனுஷ் சாருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கட்டும். உங்களுடைய கலைப்பயணத்தில் மேலும் பல வெற்றிகளையும், அளப்பரிய சந்தோஷத்தையும் அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் என்றும் சிறப்பானது எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தனுஷுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்த மற்றும் இயக்கிய  படங்களில் பாடகி ஸ்வேதா மோகன் பாடிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் வெளியான  வாத்தி திரைப்படத்தில் வரும்  வா வாத்தி , ராயன்' படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இவர் பாடிய  நீயே ஒளியே மற்றும் வாட்டர் பாக்கெட் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web