×

சிரியா சிறுவன் கடவுளிடம் சொல்லிவிட்டான் போலிருக்கு – லஷ்மி ராமகிருஷ்ணன் ஆதங்கம் !

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தொலைக்காட்சி புகழ் லஷ்மி ராமகிருஷ்ணன் பூமியை நாம் அளவுக்கு அதிகமாக சேதப்படுத்துப் படுவதாகக் கூறியுள்ளார்.

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 4 லட்சம் மக்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் 600 பேரை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இணையத்தில் சிரியா பயங்கரவாத தாக்குதலின் போது கொல்லப்பட்ட சிறுவன் கடைசியாக சொன்ன ‘நான் கடவுளின் எல்லாவற்றையும் சொல்லப்போகிறேன்’ என்ற புகைப்படத்தைப் பகிர்ந்து ‘அந்த சிறுவன் சொல்லிவிட்டான் போலிருக்கு’ எனப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள லஷ்மி ராமகிருஷ்ணன் ‘இந்த செய்தி உண்மையா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் நாம் பூமியை அளவுக்கு அதிகமாக கொடூரப்படுத்துகிறோம். நம் வேற்றுமைகளை எல்லாம் மறந்து நாம் செய்த சேதங்களை சரிசெய்ய வேண்டும். இந்த பூமியை இன்னும் சிறந்த இடமாக மாற்றவேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News