ஊரை ஏமாத்தலாம்... என்னை ஏமாத்த முடியாது..! வாக்குச்சாவடியில் பொளந்து கட்டிய டிஆர்!

 
ஊரை ஏமாத்தலாம்... என்னை ஏமாத்த முடியாது..! வாக்குச்சாவடியில் பொளந்து கட்டிய டிஆர்!

இன்று காலை முதலே பரபரப்பாக வாக்குப்பதிவு அரங்கேறிய வண்ணம் உள்ளது. திரை பிரபலங்கள் பலரும் சென்னையில் வாக்களித்தனர். அஜித், விஜய், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், திரிஷா, இளையராஜா உள்பட பலர் வாக்கு அளித்தனர்.

நடிகர் டி.ராஜேந்தர் வாக்களிக்கும்போது ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த இடமே ஒரு நிமிடம் அதிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த டி.ராஜேந்தர் சரமாரியான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை எங்கே என்பதே அவரது வாதமாக இருந்தது. வயதானவங்களுக்கு என்ன மரியாதை? எவ்வளவு நேரமா உட்கார்ந்துருக்காங்க. எல்லாரும் ஒரே கியூவுலதான் நிக்கணுமா? எங்கேயா கியூ போட்டுருக்காங்க? போட்டதைக் காட்டுங்க. நீயும் தாடி நானும் தாடி. கேள்வி கேட்பேன். ஊரை ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது.

அதாவது அப்படி தூண்டிவிட்டு டிஆர்.கோபப்பட்டார்னு நியூஸ் போட முடியும். உன் வேலையை நீ பார்த்துட்டேல்ல. சொன்னது வேற. செய்றது வேற. உன் பேரு என்னய்யா? சரவணன். நீ சரவணன். நான் சர்ரு சர்ருன்னு கேள்வி கேட்குறவன். தெரியுதா? சரசரசரன்னு கேள்வி கேட்குறவன். அப்புறம் சொடக்கு போட்டு எதிரில் நீட்டிய பத்திரிகையாளர்களின் மைக்கை விலக்கினார். அந்த இடமே ஒரு நிமிடம் ஆடிப்போனது.

From Around the web