ஹீரோயின்கள் என்றால் இளக்காராமா... கொதிக்கும் ஆடுகளம் நாயகி
ஹீரோக்களுக்கு வராத பிரச்சனை ஹீரோயின்களுக்கு மட்டும் ஏன் வருகிறது என்று நடிகை டாப்சி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Mon, 29 Mar 2021

தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். நல்ல கதைக் களங்களைத் தேர்வு செய்து நடிக்கும் டாப்ஸி, தன் மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாகப் பேசும் வழக்கம் கொண்டவர். சோசியல் மீடியாவில் கேலி, கிண்டல்களுக்கு அதிரடி பதில் கொடுப்பது டாப்ஸியின் பாணி.
ஹீரோயின்கள் பிகினி போட்டோ போடும்போது மட்டும் ஏன் விமர்சனங்கள் வருகிறது என்று ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் கூறுகையில், `இந்தப் பிரச்சனை ஹீரோயின்களுக்கு மட்டும்தான் வருகிறது.
ஒரு ஹீரோ கடற்கரையிலோ அல்லது ஜிம்மிலோ சட்டையைக் கழற்றிவிட்டு போஸ் கொடுத்தால் பிரச்சனையில்லை. ஆனால், ஒரு ஹீரோயின் பிகினி போட்டோ போட்டால் மட்டும்தான் விமர்சனம் வருகிறது. இது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை’ என்று கொதித்திருக்கிறார்.