உட்கார்ந்து போஸ் கொடுக்க வேற இடம் கிடைக்கலயா?... டாப்சியை திட்டும் ரசிகர்கள்
Tue, 2 Feb 2021

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், டாய்லெட்டில் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பகிர்ந்து ‘இது அசிங்கமான இடம் இல்லை. இது அசிங்கமான வாழ்க்கை’ என பதிவிட்டுள்ளர்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உட்கார்த்து போஸ் கொடுக்க வேற இடம் கிடைக்கலயா?...’என பதிவிட்டு வருகின்றனர்.