×

சைக்கோ குறும்பட போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.. உங்களை ஊர் அறியட்டும்!

சைக்கோ படக்குழு சார்பாக ஒரு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இளையராஜா இசைமையத்துள்ளார். இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படக்குழு சார்பாக ஒரு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சில விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஒரு ஆண், பெண் இருவர் மட்டுமே நடித்திருக்க வேண்டும்

2. 2 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

3. வசனம் இருக்கக் கூடாது

4. செல்போனில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்

5. சைக்கோ படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் வீடியோவின் பின்னணி விரும்பினால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

6. வீடியோ சமர்பிக்க 27ம் தேதி கடைசி நாள்

7. வயது வரம்பு கிடையாது. சினிமாவின் மீது காதல் கொண்ட யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

கலந்து கொள்ளும் குறும்படங்களில் 3 தேர்ந்தெடுக்கப்பட்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். அதேபோல், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டர், நடிகர், நடிகை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News