×

தல அஜித் சார்... உங்களை நான் சந்திக்கவில்லை...ஆனால்? - வாழ்த்து கூறிய ராஷ்மிகா மந்தனா

நடிகர் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே, ஒரு வாரமாகாவே அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதை கொண்டாடி வருகின்றனர்.
 

டிவிட்டரில் தனி டிபி உருவாக்கினர். நேற்று  #HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். அதோடு, திரையுலகை சேர்ந்த பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கீதா கோவிந்தம் திரைப்பட புகழ் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அஜித் சார். நான் உங்களை சந்தித்ததில்லை. ஆனால், உங்களின் ரசிகர்களின் பல முறை உங்களை பற்றி பேசி உங்களை சந்தித்தது என்னை உணர வைத்துவிட்டனர்’ என கவிதை போல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News