×

தலைவா மீண்டும் உங்க படத்தில நடிக்கணும் –விஜய் சேதுபதி வாய்விட்டு கேட்ட இயக்குனர்!

சூதுகவ்வும் படத்தில் தன்னை இயக்கிய நலன் குமாரசாமி படத்தில் மீண்டும் நடிக்க விஜய் சேதுபதி ஆசை தெரிவித்துள்ளார்.

 

சூதுகவ்வும் படத்தில் தன்னை இயக்கிய நலன் குமாரசாமி படத்தில் மீண்டும் நடிக்க விஜய் சேதுபதி ஆசை தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாற்றிய படம் என்றால் சூது கவ்வும்தான். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த பிளாக் காமெடி வகைப் படம் என்ற பட்டியலில் உச்சத்தில் உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி இருந்தார்.

அந்த படத்தின் வெற்றி மீண்டும் அந்த கூட்டணி மீண்டும் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் இணைந்தது. இந்நிலையில் நலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என விஜய் சேதுபதி ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.  மேலும் ஒரு நேர்காணலில் ‘இரண்டு படங்களில் அவருடன் நடித்திருந்தாலும் அவரது பாணியை புரிந்து கொள்ள முடியவில்லை’ எனக் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

201 5 ஆம் ஆண்டுக்குப் பின் எந்த படத்தையும் இயக்காத நலன் குமாரசாமி இப்போது ஸ்டுடியோ க்ரின் நிறுவனத்துக்காக கதை ஒன்றை எழுதியுள்ளார்.

நலன் குமாராசாமி, சூதுகவ்வும், விஜய் சேதுபதி, nalan kumarasamy, vijay sethupathi,

From around the web

Trending Videos

Tamilnadu News