Categories: Cinema News latest news

படப்பிடிப்பு தளத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் நடிகைகள்…. என்ன பிரச்சனை தெரியுமா?

திரையுலகை பொருத்தவரை பொதுவெளியில் மட்டுமே பிரபலங்கள் சக நடிகர் மற்றும் நடிகைகளுடன் நட்பு பாராட்டி வருவார்கள். உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் போட்டியாக தான் கருதுவார்கள். சினிமாவும் ஒரு தொழில் தானே இங்கு போட்டி பொறாமை இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

Tamannaah

அந்த வகையில் ஹீரோக்களை விட நடிகைகள் மத்தியில் தான் அதிக போட்டி பொறாமை நிலவி வருகிறது. மற்ற நடிகையின் வாய்ப்பை தட்டி பறிப்பது, பிறருக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவார்கள். இதுதவிர ஒரு படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் இருந்தால் அந்த தயாரிப்பாளரின் கதி அதோ கதி தான்.

ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகும். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்ல படத்திலும் தனக்கான கேரக்டருக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என சண்டையிட தொடங்கி விடுவார்கள்.

keerthi suresh

தற்போது அப்படி ஒரு சம்பவத்தை தான் பார்க்க போகிறோம். அஜித் நடிப்பில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற வேதாளம் படம் தற்போது தெலுங்கில் போலோ சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தில் அஜித் கேரக்டரில் சிரஞ்சீவியும், அவருக்கு ஜோடியாக தமன்னாவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமன்னாவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் என்ன தகராறு என்றே தெரியவில்லையாம். படப்பிடிப்பின்போது இருவரும் பேசிக்கொள்வதில்லையாம். அவ்வளவு ஏன் ஒருவரை ஒருவர் பார்த்து லேசாக சிரிப்பது கூட கிடையாதாம். கால் மீது கால் போட்டபடி தனித்தனியாக அமர்ந்து புத்தகம் படித்து வருகிறார்களாம்.

அப்படி என்ன பெரிய பிரச்சனையா இருக்க போது. எல்லா நடிகைகளுக்கும் இருப்பது போல் இவங்க ரெண்டு பேருக்கும் இடையிலும் தொழில் போட்டி தான் காரணமாக இருக்கும் என டோலிவுட்டில் கிசு கிசுக்கப்படுகிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்