×

கொரானாவில் நல்லா சாப்பிட்டு பெருத்துபோன தமன்னா!

பாகுபலி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற தமன்னா கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் பார்வைக்கு நல்ல விருந்தாகவே இருந்தது.

 

ஆகஸ்ட் மாதம் தனது பெற்றோர் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக தனக்குக் கரோனா தொற்று இல்லை என்றும் நடிகை தமன்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமன்னாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் வெளியானது.

மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் தமன்னாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பினார். 

இந்நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டிருந்த வெப்சீரியல்களின் பணிகள் தற்போது தொடர அதற்கான விளம்பர பணிகள் தற்போது தொடர்ந்துள்ளனர். இதற்கான புகைப்படத்தில் கொஞ்சம் வெயிட் போட்டு கொழு கொழுவென மாறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News