×

தோல் மட்டுமா வெள்ளை... மனசும் வெள்ளைதான்.... புது அவதாரம் எடுத்துள்ள தமன்னா!

கடந்த 2006ஆம் ஆண்டு ரவிகிருஷ்ணா, இலியானா நடிப்பில் வெளியான 'கேடி' படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் தமன்னா. கேடி இவரது முதல் படமாக இருந்தாலும் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்தின்மூலம் அனைவராலும் பரவலாக அறியப்பட்டார். 
 
tamanna

இதையடுத்து சூர்யா, அஜித், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்தார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாகுபலி படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பும் அளவிற்கு வெற்றி பெற்றது.

இதில் பிரபாஸ் ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் தமன்னாவின் மார்க்கெட் எகிற தொடங்கியது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படம் சரியாக ஓடவில்லை. 

Tamanna
கடந்த 2006ஆம் ஆண்டு ரவிகிருஷ்ணா, இலியானா நடிப்பில் வெளியான 'கேடி' படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் தமன்னா. கேடி இவரது முதல் படமாக இருந்தாலும் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்தின்மூலம் அனைவராலும் பரவலாக அறியப்பட்டார். 

இதன்பின் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் ஏதும் இல்லை. சமீபத்தில் இவர் நடித்து ஓடிடி-யில் வெளியான 'நவம்பர் ஸ்டோரி' நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிகையாக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். பேக் டூ ரூட் (வேர்களைத்தேடி) என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார்.

பண்டைய மக்களின் வாழ்க்கை முறை மூலம் நோய்களை தடுத்து ஆயுட்காலத்தை நீட்டிக்கும் வழிமுறைகள் குறித்து இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை அவருடன் இணைந்து லூக் கவுன்டினோகோ என்பவரும் எழுதியுள்ளார்.

tamana book

இதுகுறித்து பேசிய தமன்னா, 'இது என் முதல் புத்தகம் என்பதால் நிறைய மக்களிடம் சென்று சேர வேண்டும் என நினைக்கிறேன்.இதன்மூலம் நாம் பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள முடியும்.இன்றைய காலகட்டத்தில் மக்களின் கலாச்சார பண்பாட்டை அறிந்துகொள்வது அவசியம்' என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News