டோலிக்கு ஒரே ஜாலி தான்... கொண்டாட்டத்தை ஆரம்பித்த தமன்னா!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் ‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் அதன் பிறகு S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ ‘கல்லூரி ‘ போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.
பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமன்னா சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் தமன்னாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே நண்பர்கள் சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் "என் பிறந்தநாள் நாள் பரிசுகளை திறந்து காண மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்." என கூறி கியூட்டாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.