×

எல்லா மதத்தின் பொறுக்கிக்கும் ஒரே கல் தான்... தாமரை ஆவேசம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல்கள்/வன்முறை மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. 
 
Lyricist-Thamarai-Wiki

சென்னை கே.கே. நகரில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் வேலை செய்து வரும் ராஜகோபாலன் எனும் ஆசிரியர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, திரும்பிய பக்கம் எல்லாம் அதைப்பற்றிய பேச்சாகவே இருந்து வருகிறது. 

பாலியல் சம்பந்தமான இந்த விவாதம் ஆரோக்யமாகவே பலரால் பார்க்கப்பட்டாலும், பிரச்சனையை மடைமாற்றும் எண்ணத்திலும் ஒருசிலர் செயல்பட்டு வருகின்றனர்.

மாணவிகளுக்கு எதிரான இந்த நிகழ்வை பற்றி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில், பெண் வெளிப்படையாக தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் தாமரை தனது முகப்பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல்கள்/வன்முறை மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தமுறை புண்ணியம் கட்டிக் கொண்டது பத்மா சேசாத்ரி பள்ளி. பாரம்பரியம் மிக்கதாகவும் சமூகத்தில் உயர்படியில் இருப்பதாகவும் தோற்றத்தைக் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. 

வெட்கக்கேடு ! இதற்கு விளக்கம் வேறு தேவையா ? . முன்னாள் மாணவிகள், விசயத்தைத் துணிந்து இணையத்தில் வெளியிட, தீ பற்றிக் கொண்டது. நல்லதுதான்... வேண்டியதுதான். ஆசிரியக் கோமகன் இராசகோபாலன் தற்போது சிறையில் !. எவ்வளவு வேகமான நடவடிக்கை ! கண்டிப்பாக வரவேற்க வேண்டும். கல்வித்துறை அமைச்சருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் !

பி.கு : 1. இந்தப் பதிவு அனைத்து மதங்களின் பொறுக்கிகளுக்கும் பொருந்தும். ஜெயேந்திரர்களுக்கும் பீஜெய்களுக்கும் ஃபாதர் தாமஸ்களுக்கும் ஒரே எடைக்கல்தான் !.

2. நான் எழுதியதன் சாரத்தைப் புரிந்து கொள்ளாமல் இங்கே வந்து அவரவர் சார்புக்கேற்ப வாந்தி எடுப்பவர்களைப் பட்டியல் நீக்கம் செய்வேன்.

From around the web

Trending Videos

Tamilnadu News