Categories: Cinema News latest news throwback stories

பாடல் பிடித்து போன் செய்த ரசிகை.. – அஞ்சாவது நாளே விஜய் ஆண்டனி செய்த காரியம்!..

தமிழ் திரையுலகில் மக்கள் மனதில் நீங்கா இசையை கொடுத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இயக்குனர் விஜய் ஆண்டனி. அவை இசையமைத்த பல படங்களின் பாடல்கள் தமிழில் பிரபலமாக உள்ளன.

ஆனால் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரை விடவும் நடிகர்களுக்குதான் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதால் மெல்ல இசையமைப்பாளரில் இருந்து நடிகனாக மாறிவிட்டார் விஜய் ஆண்டனி. அவரது முதல் திரைப்படமான நான் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay Antony

அதனை தொடர்ந்து வரிசையாக படம் நடித்து வருகிறார். தற்சமயம் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்தப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டு முகத்தில் அடி ஏற்பட்டது. தற்சமயம் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அவரது காதல் கதை குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசியிருந்தார்.

சுக்கிரன் திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து முடித்த பிறகு அவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் ஒரு பெண் பேசியுள்ளார். அவர் பேசும்போது சுக்கீரன் திரைப்பட பாடல்கள் நன்றாக இருந்தது என பேசியுள்ளார். இருவரும் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர்.

Vijay Antony

அதற்கு பிறகு மூன்றாவது நாளே அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார் விஜய் ஆண்டனி. ஏனெனில் அந்த பெண் விஜய் ஆண்டனி தெருவிற்கு பக்கத்து தெருவில்தான் இருந்துள்ளார். அடுத்து ஐந்தாவது நாள் நான் திரைப்பட இயக்குனர் விஜய் ஆண்டனியை பார்க்க வந்தப்போது அவரிடம் இவர்தான் என் மனைவி என தன் காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவ்வளவு வேகமாக காதல் செய்துள்ளார் விஜய் ஆண்டனி. படத்தில் ரொமான்ஸே வராது என பலரால் விமர்சிக்கப்படும் விஜய் ஆண்டனிக்கு இப்படி ஒரு காதல் கதை இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

இதையும் படிங்க: கார் டிரைவரை தயாரிப்பாளர் ஆக்கிய ஜெய்சங்கர்… ஆனா அவர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

Published by
Rajkumar