kamal
தமிழ் சினிமாவில் ஈகோ இல்லாமல் எந்த நடிகர்களும் இல்லை என்றே சொல்லலாம். வெளியில் எதுவும் தெரியாத மாதிரி காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் ஈகோ இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தன்னுடைய ஈகோவால் வந்த நல்ல வாய்ப்புகளை தவறவிட்ட நடிகர்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கிறோம்.
sathyaraj rajini
சத்யராஜ் – ரஜினி: இவர்களுக்குள் இருந்த ஈகோ ஊரறிந்த விஷயம். அந்த ஈகோவால் சத்யராஜுக்கு வந்த மிகப்பெரிய வாய்ப்பு பறிபோனது. ரஜினியின் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘சிவாஜி’. அந்தப் படத்தில் சுமன் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் முதலில் சத்யராஜ் தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சத்யராஜுக்கு ஏற்கெனவே ரஜினி மீதிருந்த ஈகோவால் ‘ நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன், ஆனால் என் அடுத்தப் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா?’ என கேட்டிருக்கிறார். இருந்தாலும் சங்கர் சத்யராஜ் நடித்தால் தான் சரியாக இருக்கும் என கருதி மீண்டும் போய் கேட்க மிகப்பெரிய தொகையை கேட்டு தட்டிக் கழித்து விட்டாராம் சத்யராஜ்.
kamal raghuvaran
ரகுவரன் – கமல் : ரகுவரனுக்கும் கமலுக்கும் இடையே ஈகோ இருந்ததனால் தான் சேர்ந்து நடிக்க வில்லை என்று ஒரு சில பேர் கூறினாலும் உண்மையில் வாய்ப்புகள் அமையவில்லை என்று தான் நடிகை ரோகிணி கூறியிருந்தார். ஆனால் கமல் எப்பொழுது தன்னை விட அதிகமாக நடிக்கக் கூடிய நடிகரை பக்கத்தில் சேர்க்க மாட்டார் என்ற ஒரு செய்தி கூறப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் ரகுவரன் எப்பேற்பட்ட நடிகர். அதனால் தான் ரகுவரனை நடிக்க வைக்க கமல் முனைப்பு காட்ட வில்லை என்று கூறிகின்றனர். ஆனால் நாயகன் படத்தில் நாசர் கதாபாத்திரம் ரகுவரன் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது முடியாமல் போய்விட்டதாம்.
vikram surya
விக்ரம் – சூர்யா: விக்ரமும் சூர்யாவும் சேர்ந்து நடித்த ஒரே படம் பிதாமகன். ஆனால் பாலா இந்தப் படத்தில் முதலில் விக்ரமிடம் ‘உன்னை மையப்படுத்தி தான் இந்த கதையே வரும் ’ என்று சொன்னதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டாராம். ஆனால் படம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் சூர்யா. அதில் விக்ரமுக்கு கொஞ்சம் வருத்தமாம். அதிலிருந்து இனி மல்டி ஸ்டாரர் படங்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்தாராம். ஆயுத எழுத்து படத்தில் மாதவன் கதாபாத்திரத்திற்கு விக்ரமை அணுக முடியாது என மறுத்து விட்டாராம். அதன் பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு மல்டி ஸ்டாரர் படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார் விக்ரம்.
simbu dhanush
தனுஷ் சிம்பு: தனுஷும் சிம்புவும் ஒரே காலத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் கழுவி கழுவி ஊற்றிய சம்பவம் எல்லாம் நடந்தேறியிருக்கிறது. தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வடசென்னை’ படத்தில் ராஜன் கதாபாத்திரம் மிகச்சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதில் முதலில் தனுஷை தான் நடிக்க சொன்னாராம். தனுஷ் ஏற்றிருந்த அன்பு கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க முடிவெடுத்திருந்தாராம் வெற்றிமாறன். ஆனால் தனுஷ் இது என்னோட பிரஸ்டிஜ் சம்பந்தப்பட்ட விஷயம், அதனால் சிம்பு ஹீரோவாக நடிக்கிற படத்தில் சிறிய பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூற காலப்போக்கில் அது தனுஷின் படமாக மாறிவிட்டதாம்.
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…
Idli kadai:…
Vijay: கரூரில்…