Rajinikanth2
இன்று குடி எத்தனை பேரின் வாழ்க்கையை சீர்குலைக்கிறது என நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அதுவும் நமக்கு பிடித்த நடிகர்கள் படங்களில் குடிக்கும் காட்சிகளில் நடிப்பதை பார்த்து கூட ரசிகர்கள் கெட்டு வருகின்றனர். இருந்தாலும் அந்தக் காட்சிகள் வரும் போது கீழே மது அருந்துதல் கேடு என டைட்டிலும் போடுகின்றனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலாக சில நடிகர்கள் உண்மையிலேயே குடிக்கு அடிமையாகி அதனால் ஏற்படும் விளைவுகளை ரசிகர்களிடம் பொது மேடைகளில் வெளிப்படையாக தெரிவித்து தங்களால் முடிந்த ஆலோசனைகளையும்
வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சினிமாவிலும் ஒரு சில நடிகர்கள் தங்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக ஆல்கஹாலுக்கு அடிமையாகி விடுகின்றனர். அவர்களில் ஒரு சில நடிகர்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.
நடிகர் ரஜினி : இன்று தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான். இன்று பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் விரும்பத்தக்க நடிகராக வலம் வருகிறார் ரஜினி. 80களில் ஆரம்பித்த தன் திரைப்பயணத்தை இன்று ஒரு மாபெரும் வசூல் மன்னனாக மாற்றியிருக்கிறார். ரஜினியே பல மேடைகளில் தனக்கு இருந்த கெட்டப்பழக்கங்களைப் பற்றியும் அதனால் தனக்கு ஏற்பட்ட நிலைமையை பற்றியும் கூறியிருக்கிறார். ஒரு நேரத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் படு மோசமான நிலைமையில் இருந்து அதிலிருந்து தப்பித்து ஆன்மீகத்தில் தன் மொத்த கவனத்தையும் திருப்பினார். அது முதலே எந்த ஒரு பழக்கமும் இல்லாத உன்னத நடிகராக வலம் வருகிறார் ரஜினி.
நடிகர் விஜய்சேதுபதி : தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. குறுகிய காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய வேலைப்பளுவை மறக்க குடிப்பாராம். அதுவும் போக நன்றாக சாப்பிடக் கூடிய நடிகரும் ஆவார். கட்டுப்பாடு இல்லாத சாப்பாடு மற்றும் மது அருந்துதல் போன்றவற்றாலயே இவரின் உடல் எடை கூடுதலாக இருக்கிறதாம்.
நடிகர் கவுண்டமணி : 80களில் சினிமாவில் அறிமுகமானாலும் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர் தான் கவுண்டமணி. ரெஸ்ட் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்திருக்கிறார். ஒரு நேரத்தில் கவுண்டமணி இல்லாத தமிழ் படங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு படு பிஸியாக நடித்து வந்திருந்ததனால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் ரெஸ்ட் கிடைக்குமாம். அந்த நேரத்திலும் தூக்கமும் வராதாம். தூங்குவதற்காக குடியை கையில் எடுத்தவர் பின்னாளில் அதுவே பழகி விட்டதாம்.
நடிகர் விஜயகாந்த் : கிட்டத்தட்ட கவுண்டமணி நிலைமைதான் விஜயகாந்திற்கும். தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் விஜயகாந்த். இவரும் இறைச்சியை நன்றாக சாப்பிடக்கூடியவர்தான். அப்படி சாப்பிட்டதால் தான் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் எங்கு இருந்தாலும் குதித்து நடிப்பாராம். உடலையும் கட்டுகோப்பாக வைத்திருந்திருக்கிறார். உடல் சோர்வை போக்குவதற்காக குடித்த விஜயகாந்த் அதுவே அதிகமாகியிருக்கிறது. இப்போது அவரின் உடல் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
நடிகர் விஷால் : விஷாலை பற்றி பல வதந்திகள் வந்தாலும் சினிமாவில் ஒழுங்கான நேரத்திற்கு வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் குடிதான் என்று சொல்லப்படுகிறது. தினமும் குடிப்பாராம். குடித்து விட்டு தூங்குவதால் தான் படுத்து உறங்கிவிடுகிறாராம். அதனாலேயே படப்பிடிப்பிற்கு
தாமதமாக வருகிறாராம். மேலும் அவரின் நடிப்பில் தயாராக இருக்கும் மார்க் ஆண்டனி படம் மூன்று மாதங்களில் முடிக்க வேண்டிய படமாம். ஆனால் இரண்டு வருடங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் விஷாலின் இந்த நிலைமைதான் என்று சொல்கிறார்கள்.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…