×

தமிழ் சினிமாவில் திக் திக் படங்கள்....ஒரு த்ரில்லிங் அனுபவம் 

 
inkl

தமிழ்சினிமாவில் காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ், த்ரில் கலந்த அனுபவமாக இருக்கும் என்றால் அது நிச்சயமாகத் துப்பறியும் படங்களாகத்தான் இருக்கும். தமிழ்சினிமாவில் துப்பறியும் படங்கள் ஏராளமாக வந்துள்ளன. அத்தகைய படங்களைப் பார்ப்பதற்கென்றே ஒரு தனி ஆர்வம் ஏற்படும். அடுத்து என்ன அடுத்து என்னவாகும் என ஒரு பரபரப்புடனேயே படம் முழுவதையும் பார்க்கத் தூண்டிவிடும் அந்த ஆவல். அவற்றில் குறிப்பிடத்தக்க படங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

தமிழில் துப்பறியும் நாவல்களை எழுதியவர்கள் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், தேவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ்த்திரைப்படங்கள் பிரபலமடைந்த பின்னர் துப்பறியும் காவல் துறை அதிகாரி பாத்திரம் பல படங்களில் பயன்படுத்தப்பட்டது.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெகுஜன இதழ்களில் தொடர்களாகவும், பாக்கட் நாவல்களாகவும் துப்பறியும் கதைகள் தமிழ் வாசகர்களிடையே பிரபலமடைந்தன. ராஜேஷ்குமார், சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர் தற்கால துப்பறிவு நாவல்கள் எழுதும் எழுத்தாளர்கள்.

cid

1960களிலும் 1970களிலும் ஜெய்சங்கர் நடிப்பில் பல துப்பறியும் படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று தான் சிஐடி சங்கர். ஜெய்சங்கர் படங்கள் பல துப்பறியும் கதைகளாக வந்ததால் அவரை தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு என்றே ரசிகர்கள் அழைத்தனர். அந்த வகையில் சிஐடி சங்கர் படம் 1970ல் வெளியானது. தி.இரா.சுந்தரம் இயக்கத்தில் வெளியானது. இப்படத்தில் ஜெய்சங்கர், சகுந்தலா உள்பட பலர் நடித்தனர். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் அக்காலத்தில் துப்பறியும் படமாக வெளியானது. வேதா இசை அமைத்த இப்படத்தின் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார். இப்படத்தில் அந்த அறையினிலே ஒரு ரகசியம், தைப்பூசத் திருநாளிலே, நாணத்தால் கன்னம், பா பா பாட்டு திக்குதே ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 

mk

எம்ஜிஆருக்கு தர்மம் தலைகாக்கும், மலைக்கள்ளன், சிவாஜிகணேசனுக்கு புதிய பறவை, அந்த நாள், மரகதம், கல்யாணியின் கணவன், அன்னை இல்லம், ஞான ஒளி  ரவிச்சந்திரனுக்கு அதே கண்கள், நம்பியாருக்கு திகம்பர சாமியார் போன்ற துப்பறியும் படங்கள் வெளியாகின. ஜாவர் சீதாராமனின் ஏழை படும் பாடு, 1950ல் வெளியான துப்பறியும் படம். 

thu

விடியும் வரை காத்திரு என்ற படம் 1981ல் வெளியானது. இது கே.பாக்யராஜ் நடித்த ஒரு த்ரில்லர் படம். டிக்டிக்டிக் பாரதிராஜாவின் படைப்பில் கமல் நடித்த த்ரில்லர் படம்.

dsr

ஒரு கைதியின் டைரி படம் சூப்பர்ஹிட் த்ரில்லிங் அனுபவ படம். இதுவும் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான படம் தான். கமலுக்கு சிகப்பு ரோஜாக்கள் ஸ்ரீதேவி நடித்த இப்படம் பயங்கரமான த்ரில்லிங் அனுபவத்தைத் தரும்.

vnsss

ரஜினிகாந்த் நடித்த நான் சிவப்பு மனிதன் படமும் த்ரில்லான படம்தான். ஆபாவணன் என்ற திரைபபடக்கல்லூரி மாணவர் தன்னுடன் பயிலும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு எடுத்த படம் ஊமை விழிகள். படத்தின் இயக்குனர் அரவிந்தராஜ். விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படம் சஸ்பென்ஸ், த்ரில்லிங் நிறைந்த படமாக வெளியானது. புலன் விசாரணை, 100வது நாள் படங்களும் திக் திக் படங்கள் தான்.

தற்காலத்தில் துப்பறியும் படங்கள் நிறைய வந்துள்ளளன. மாயவன், வி1 மர்டர் கேஸ், தெகிடி, குரங்கு பொம்மை, அதே கண்கள், நிபுணன், ஒரு மெல்லிய கோடு, துப்பறிவாளன், தடம், துருவங்கள் பதினாறு, ராட்சசன்;.

2018ன் ஆரம்பத்தில் இருந்தே துப்பறியும் படங்களாக வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இன்று வரை இருந்து வருகிறது. ராட்சசன், இரும்புத்திரை, இமைக்கா நொடிகள்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தில் சுஜாதாவின் துப்பறியும் கதாபாத்திரங்களான கணேஷ் வசந்த் பெயரைத்தான் இப்படத்தின் துப்பறியும் கதாபாத்திரங்களுக்கு சூட்டியிருந்தார் இயக்குனர். மனிதர்களின் ஆசைதான் அவர்களை அழிவுக்குக் கொண்டு செல்கிறது என்பதை இந்தத் த்ரில்லர் படம் சொல்கிறது. 

இரும்புத் திரை 

இந்தக் காலத் திருடனுக்கு சாவி தேவையில்லை. நம்மைப் பற்றிய சின்ன தகவல்களே போதும் என்ற மையக்கருத்தைக் கொண்டு த்ரில்லான அனுபவத்தைத் தந்திருக்கிறது திரைக்கதை. லாஜிக் மீறல்கள் என எந்த பந்தாவும் இல்லாமல் விஷாலின் இரும்புத்திரை உறுதியாக வெளியாகி வெற்றி நடைபோட்டது. விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் வெளியாகி த்ரில்லான ஒரு அனுபவத்தைத் தந்தது.

thu

யூடர்ன் 

ஒரு பெண் பத்திரிகையாளர் தான் செய்யும் ஒரு அசைன்மெண்ட் மூலம் சந்திக்கும் பிரச்சனைகளும் அடுத்தடுத்து அவருக்கு நடக்கும் சம்பவங்களும் தான் இந்தப் படம். ஒன் வுமன் ஷோவாக சமந்தா கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்துள்ளார். நமது சின்ன சின்னத் தவறுகளும் பிறருடைய வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் படம் தான் யூடர்ன். 

இமைக்கா நொடிகள் 

சிங்கத்தின் இரையை கழுதைப்புலி ஒன்று தந்திரமாகப் பறித்துச் சென்றால், அந்த சிங்கம் என்ன செய்யும்? இமைக்கா நொடிகள் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி இதுதான். நயன்தாராவும், அனுராக் காஷ்யபும் போட்டி போட்டு நடித்தனர். திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைத்தது. 

ராட்சசன் 

ratt

பள்ளி மாணவிகளை மட்டும் கொடூரமாகக் கொலை செய்யும் சீரியல் கில்லருக்கும், அவனைப் பிடிக்க விரட்டும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் திக் திக் சம்பவங்கள் தான் ராட்சசன். சைக்கோ கில்லர் தான் கொடூரமான ரத்த வெள்ள காட்சிகள் எதுவுமின்றி வித்தியாசமாக இருந்தது. காட்சிகளின் இசை நம்மை நிஜமாகவே பயமுறுத்தியது.

துப்பாக்கி முனை 

யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காக குறி வைக்கப்பட்ட ஒரு அப்பாவியைக் காப்பாற்றும் போலீஸ் அதிகாரியின் கதை. விறுவிறுப்பான கதை, அசர வைக்கும் திருப்பங்கள் நிறைந்த இப்படம் ரியலி சூப்பர். கொலைக்கு கொலை சரியல்ல என்பதை ஒரு போலீஸ் அதிகாரிக்கு உணர்த்தியது துப்பாக்கி முனை.  

From around the web

Trending Videos

Tamilnadu News