×

ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த கனவு சுந்தரிகள்... ஒரு பார்வை..

அன்று முதல் இன்றுவரை.........ஒரு பார்வை

 
actress

ரசிகர்கள் எத்தனையோ பேர் தங்கள் தூக்கத்தை சினிமா மோகத்தால் தொலைத்து வருகின்றனர். அதில் வரும் கனவு தேவதைகளை, தனக்கு ஜோடியாக நினைத்து ஏங்கி தவித்த காலகட்டம் 80களில் இருந்தே தொடங்கிவிட்டது எனலாம். அப்போது ரசிகர்களை கிறங்கடித்தவர்கள் பட்டியலில் நடிகையர் திலகம் சாவித்தி;ரி கூட இருப்பது ஆச்சரியம் தான். அவரும் சுழி என்ற படத்தில் குடிக்குப் போதையாகும் நடிகையாக நடித்து கவர்ச்சி காட்டியிருப்பார். அதேபோல் நடிகை லட்சுமி திருமகள் என்ற படத்தில் செம கவர்ச்சி காட்டியிருப்பார். ஸ்ரீவித்யா கமலுடன் உணர்ச்சிகள் படத்தில் நடித்து உணர்ச்சியைத் தூண்டியிருப்பார். 80களில் இருந்து தான் கவர்ச்சி கதாநாயகிகளின் வரவு குதூகலமாக ஆரம்பமானது. அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

இவர்களில் தீபா, ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, மாதவி, ரதி, ராதா, அம்பிகா, அமலா, பானுப்பிரியா, சில்க், டிஸ்கோசாந்தி, ஜெயப்பிரதா, பிரமிளா, குஷ்பூ, நக்மா, சங்கவி, கஸ்தூரி, வினிதா, ஷில்பா ஷெட்டி, சிம்ரன், ஜோதிகா, பாவனா, ரம்பா, கனகா, மந்த்ரா, மானு, அனுஷ்கா, நவ்யா நாயர், ஹீரா, ரோஜா, பிரியாராமன், ஷகிலா, ஜோதிலட்சுமி, மல்லிகா ஷெராவத், மாளவிகா, சோனியா அகர்வால், காஜல் அகர்வால், ஊர்மிளா, அசின், திரிஷா, விசித்ரா, மீனா, நந்திதா, தபு, மனீஷா கொய்ராலா, ஷெரின், சிந்து துலானி, ஆண்ட்ரியா, சன்னிலியோன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மெஹ்ரின், ஹன்சிகா, அம்ரிதா ஐய்யர், ஜனனி ஐய்யர் ஆகியோர் முக்கிய இடத்தைப் பிடிப்பவர்கள். 

இந்த லிஸ்டில் நடிகை தீபாவுக்கு முக்கிய இடம் உண்டு. ஆடையுடன் பார்த்தாலே கிக்காக இருப்பார். அவரே கவர்ச்சியாக நடித்தால், சொல்லவே வேண்டாம். கமலுடன் நடித்த படங்களான அரங்கேற்றம், மீண்டும் கோகிலா படங்களிலும், ரஜினியுடன் ஜானி படத்திலும்; கவர்ச்சியில் தாராளமாக நடந்து கொள்வார். ஸ்ரீதேவி கமலுடன் அதிக படங்களில் நடித்து இருப்பார். வாழ்வே மாயத்தை மறக்க முடியாது. கிக் ஏற்றும் ஆடையில் மழைக்கால மேகம் ஒன்று பாடலுக்கு கவர்ச்சி போதையைக் காட்டியிருப்பார். பானுப்பிரியா, கஸ்தூரி இவர்களைப் பார்த்தாலே கவர்ச்சி தான். அந்தளவு அவர்கள் கண்களே கவர்ச்சியில் திக்குமுக்காடச் செய்யும்.

மூன்றாம்பிறையில் சில்க் கமலுடன் போதையேற்றும் நடனம் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பார். கோழிகூவுது படத்திலும் ரசிகர்களை கிறங்கடித்திருப்பார்.

அஜீத்துடன் அமராவதி, விஜயுடன் கோயம்புத்தூர் மாப்ளே படங்களில் கவர்ச்சியில் கிறங்கடித்த நடிகை சங்கவி. அவருக்காக ரசிகர்கள் திரும்ப திரும்ப படம் பார்க்க சென்றனர். கட்டபொம்மன் படத்தில் நடித்த வினிதா தாராளமாக கவர்ச்சி காட்டியிருப்பார். அதேபோல் உள்ளத்தை அள்ளித் தா படத்தில் ரம்பா கவர்;ச்சியை அள்ளி அள்ளி தந்திருப்பார். வாலி படத்தில் சிம்ரனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பது போல் கவர்ச்சி காட்டியிருப்பார். அப்பாஸ_டன் நடித்த பூச்சூடவா படத்தில் கவர்ச்சி போதை ஏற்றியிருப்பார். பம்பாய் படத்தில் மனீஷா கொய்ராலாவின் கவர்ச்சிக்காக படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். வள்ளி படத்தில் பிரியாராமனும் கிக் ஏற்றும் வகையில் நடித்து அசத்தியிருப்பார். அஜீத்துடன் ஆசை படத்தில் நடித்த ஹீரா மொட்டு மொட்டு மலராத மொட்டு என்ற ஒரே பாடலில் ரசிகர்களை கவர்ச்சியில் கிறங்கடித்திருப்பார். 

கரகாட்டக்காரனில் கனகாவுக்காக படம் பார்த்தவர்கள் ஏராளமானோர் உண்டு. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் அஜீத்துடன் ஜோடியாக நடித்த தபு கிக் ஏற்றியிருப்பார். பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் இணைந்து நடித்த ஷில்பா ஷெட்டியும், காதலன் படத்தில் நடித்த நக்மாவும் கவர்ச்சியை அள்ளித் தெளித்திருப்பார்கள். வடகறி படத்தில் நடித்த ஹாலிவுட் புகழ் கவர்ச்சி கன்னி சன்னிலியோன் ரசிகர்களை சூடேற்றியிருப்பார். பிரபுவின் சின்னத்தம்பியில் குஷ்பூவும், பெரியதம்பியில் கனகாவும் கவர்ச்சியைக் காட்டி மிரட்டியிருப்பார்கள். வீரம் வெளஞ்ச மண்ணு படத்தில் ராஜ்கிரணுடன் தோன்றும் படுக்கையறைக் காட்சியில் குஷ்பூ தாராளம் காட்டியிருப்பார். வேதிகா காளை படத்தில் சிம்புவுடன் கவர்ச்சியாக நடித்திருப்பார். இந்தியன் படத்தில் ஊர்மிளாவும், மனீஷாகொய்ராலாவும் கவர்ச்சியில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.

உள்ளே வெளியே படத்தில் நடிகர் பார்த்திபனுடன் நடித்த ஐஸ்வர்யா கவர்ச்சி மழையில் நனைய வைத்திருப்பார். அதே போல் எஜமான் படத்தில் அவர் 'உரக்கக் கத்துற கோழி..."பாடலில் மெல்லிய ஆடை நனைய குளித்து நம்மை சூடேற்றியிருப்பார். சூரியன் படத்தில் 18வயது இளமொட்டு மனது பாடலில் கிறங்கடித்த ரோஜாவை யாராலும் மறக்க முடியாது. அதேபோல் செம்பருத்தி படத்தில் ரோஜா காட்டிய கவர்ச்சி படத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றது. காதல் மன்னன் படத்தில் மானுவும், மாளவிகாவும் கவர்ச்சியூட்டியிருப்பார்கள். ரட்சகன் படத்தில் சுஷ்மிதா சென் செம கலக்கு கலக்கியிருப்பார். ஆவாரம்பூ படத்தில் வினித்துடன் நந்தினி படுகவர்ச்சியைக் காட்டி நடித்திருப்பார். 

அசின் ரசிகர்களின் மனதில் பிசின் மாதிரி ஒட்டிக்கொண்டார். திரிஷா சாமி படத்தில் காட்டிய கவர்ச்சியை யாராலும் மறக்க முடியாது. அனுஷ்கா விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் தாராளமாக கவர்ச்சி விருந்து படைத்திருப்பார். துள்ளுவதோ இளமை...தனுஷ_க்கு முதல் படமே இதுதான். அதில் நடித்த ஷெரின் படத்தில் கவர்ச்சி காட்டி வெற்றிக்கு அழைத்துச் சென்றிருப்பார். மன்மத ராசா பாடலில் திருடா திருடி படத்தில் தனுஷ_டன் குத்தாட்டம் போட்ட சாயாசிங்கை யாராலும் இன்று வரை மறக்க முடியாது. அதேபோல் மன்மதன் படத்தில் சிம்புவுடன் நடித்த சிந்து துலானியை மறக்குமா மாமன் எண்ணம் என்பதைப் போல இருக்கும். 

பார்வதி ஓமனகுட்டன், ரஷிதா, சுருதிஹாசன், நஸ்ரியா, நிவேதா தாமஸ். ராஷிகண்ணா, சாய்பல்லவி, ஸ்ரேயா, ராகுல் பரீத்தி சிங், தமன்னா, நித்யா மேனன், சமந்தா, ராஷ்மிகா மந்தனா இவர்கள் தான் தற்போதைய கவர்ச்சி கன்னிகள்.

நடிகருக்கு வயது தேவையில்லை. நடிப்பு இருந்தால் போதும். ஆனால், நடிகைக்கு வயது அவசியம். நடிப்புத்திறனும் தேவை. அதே நேரத்தில் கவர்ச்சியும் முக்கியம். ஆனால் கவர்ச்சியை மட்டும் நம்பி திரையுலகி;ல் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்க முடியாது. 

From around the web

Trending Videos

Tamilnadu News