×

பூக்களால் பூத்துக்குலுங்கிய தமிழ்சினிமா....!!!

 
pooaji

80கள் மற்றும் 90களின் காலகட்டத்தில் தமிழ்சினிமாவிற்கு வசந்தகாலம். அதனால் தான் என்னவோ அந்தகால கட்டத்தில் தமிழ்சினிமாவில் பூ பெயர்களாக வந்து குவிந்தன. பூக்களாக பூத்துக்குலுங்கிய சோலையாகக் காட்சியளித்தது தமிழ்சினிமா. வாசமான மல்லியாக மணம் வீசி அனைவரையும் சுண்டியிழுத்தது. பூ பெயரில் ஏகப்பட்ட படங்கள் வந்துள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். 

பூ, பூக்களைப் பறிக்காதீர்கள், பூவே பூச்சூடவா, பூவா தலையா, பூ மகள் ஊர்வலம், பூ விலங்கு, பூவே உனக்காக, ஆவாரம்பூ, பூவெல்லாம் உன் வாசம், புதிய பூவிது, உதிரிப்பூக்கள், பூவெல்லாம் கேட்டுப்பார், பூ ஒன்று புயலானது, பூ பூவா பூத்திருக்கு, ரோஜா, செம்பருத்தி, பூவிழி வாசலிலே. இவற்றில் சில படங்களை இங்கு பார்க்கலாம்.

பூவிழி வாசலிலே 

poosar


1987ல் வெளியான தமிழ்ப்படம். ஃபாசில் இயக்கிய இப்படத்தில் சத்யராஜ், சுஜிதா, கார்த்திகா, ரகுவரன், பாபு ஆண்டனி, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவு ஆனந்த குட்டன். ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரால் இப்படம் பாராட்டு பெற்றது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 100 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.  

இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் ஆட்டம் இங்கே, அண்ணே அண்ணே, சின்ன சின்ன ரோஜாப்பூவே, ஒரு கிளியின் தனிமையிலே, பாட்டு இங்கே ஆகிய பிரபலமான பாடல்கள் படத்தின் இடம்பெற்றவை. 

பூ ஒன்று புயலானது 

poovi


1985ல் தெலுங்கில் டி.கிருஷ்ணா இயக்கத்தில் பிரதிகடனா என்ற திரைப்படம் தமிழில் பூ ஒன்று புயலானது என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. விஜயசாந்தி தான் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கோட்டா சீனிவாசராவ், சந்திரமோகன், சாய்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தன்னை நடுவீதியில் அவமானப்படுத்திய வில்லன்களை தனி பெண்ணாக விஜயசாந்தி எதிர்த்து நின்று பழி வாங்குவதுதான் இந்தப்படத்தின் கதை. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ்சினிமாவில் விஜயசாந்திக்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட் உருவானது. ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது. 

பூவெல்லாம் உன் வாசம் 

2001ல் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான தமிழ்ப்படம். அஜீத் குமார், ஜோதிகா, நாகேஷ், சிவகுமார், விவேக், சுகுமாரி, கோவை சரளா, வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர். எழில் இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்தார்.

இப்படத்தில் முன்னாள் உலக அழகி யுக்தா முகி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு முன்பு வரை அஜீத்குமார் அதிரடி நாயகனாகவே வலம் வந்தார். இப்படம் தான் அவருக்கு குடும்பக் கதாபாத்திரத்துடன் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. அஜீத் எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கும் திறமை பெற்றவர் என படத்தின் இயக்குனர் எழில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் எழுதியவர் வைரமுத்து.
காதல் வந்ததும், புதுமலர் தொட்டுச் செல்லும், திருமண மலர்கள் தருவாயா, தாலாட்டும் காற்றே வா, செல்லா நம் வீட்டுக்கு, யுக்தா முகி போன்ற பிரபலமான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றவை.  

பூவே உனக்காக 

poovija


1996ல் வெளியான இப்படத்தை விக்ரமன் இயக்கினார். விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கௌரவ வேடத்தில் முரளி நடித்தார். விஜயின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இதுதான். தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ரீமேக் ஆனது.
எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னிசையில் பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். ஆனந்தம் ஆனந்தம் பாடும், சிக்லெட், மச்சினிச்சி, ஓ பியாரி, பாட்டும் நானே, சொல்லாமலே பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.  

பூவெல்லாம் கேட்டுப்பார் 

poosu

1999ல் வெளியான காதல் கலந்த நகைச்சுவை படம். வசந்த் இயக்கிய இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், அம்பிகா, கரன், மனோரமா, டெல்லி கணேஷ், வடிவேலு, பவதாரிணி, கோவை சரளா, மாது பாலாஜி, தாமு, ராஜூ சுந்தரம், மதன் பாப், கவிதா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் இசைமழையில் பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் ரகங்கள். சிபிஐ எங்கே, சுடிதார் அணிந்து, இரவா பகலா, பூத்தது, பூவே பூவே, ஓ சென்யரிட்டா, செவ்வானம் வெட்கம் கொண்டது ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

From around the web

Trending Videos

Tamilnadu News