Connect with us
Gossip

Gossips

வாரிசு நடிகரை காலி செய்ய நம்பர் நடிகையின் ப்ளாப்பான திட்டம்… அடுத்தக்கட்டம் இதுதானாம்…

Gossip: தமிழ் சினிமாவில் பிரபலங்கள் சண்டையிட்டு கொள்வது அரிதான விஷயம்தான். ஆனால் அது நடக்கும்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரல் புயலை உருவாக்கி விடும் என்பதுதான் உண்மை.

பொதுவாக இரண்டு ஹீரோக்கள் சண்டையிட்டுக் கொள்வதை தான் பார்க்க முடிந்திருக்கிறது. முதல் முறையாக நம்பர் நடிகை ஒல்லி நடிகருக்கு எதிராக ஓப்பனாகவே கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பிரச்சனையை மட்டும் சொல்லியிருந்தால் கூட அவருக்கு நிறைய சப்போர்ட் வந்திருக்கும்.

இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 139 படத்தில் ஹீரோ அப்பா… 13 வருடத்தில் 36 படம் நடித்த ஹீரோ மகன்… யார் தெரிதா?

ஆனால் மூணு பக்க கடிதத்தில் முழுக்க முழுக்க அவர் குறித்த வன்மத்தை மட்டுமே கொட்டியிருந்தார். ஒல்லி நடிகரை பிரபலத்தின் வாரிசு. அதனால்தான் உனக்கு இந்த இடம் என அவர் பேசியதெல்லாம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

நம்பர் நடிகை தன்னுடைய முன்னாள் காதலனை போல ஒல்லி நடிகர் தன்மீது வன்மத்தால் செய்யவில்லை என்றும், நாங்கள் அன்பின் திருவுருவம் என்றும் கடிதம் வெளியிட்டு ரசிகர்களிடம் தன் மீது இரக்கத்தை தேடி கொள்ள நினைத்தார்.  ஆனால் அவர் எதிர்பார்த்த விஷயம் அவருக்கு தலைகீழாக மாறியது. ஏற்கனவே சமூக வலைதளத்தில் கிழிந்து தொங்கி கொண்டிருக்கும் பெயர் தற்போது நார் நாறாக துவைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மருமகள் முதல் மூன்று முடிச்சு சன் டிவி தொடர்களின் புரோமோ அப்டேட்…

ஏற்கனவே போர்வீரன் படத்தின் மூலம் அக்கடதேசம் பக்கம் தலை வைத்து விட்டதால், இனி அங்கேயே செட்டில் ஆகி கதை கேட்கும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் தமிழில் வாய்ப்பு வராததால் இந்த முடிவை ஏற்கனவே அம்மணி எடுத்திருந்ததாகவும் தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Gossips

To Top