நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து புஷ்ஷுனு போன நடிகர்கள்.. கடைசில கேரக்டர் ரோல் கூட கிடைக்கல

by Rohini |   ( Updated:2024-12-27 02:30:25  )
bharath
X

bharath

தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகர்களும் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் வருகிறார்கள். அதற்கு காரணம் ரஜினியின் வரவு தான். ரஜினி வரும் பொழுது இவரெல்லாம் ஒரு நடிகரா என்று கேட்டவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு நடிகருக்கு உரிய எந்த ஒரு தகுதியும் இல்லாமல் தான் வந்தார். ஆனால் இன்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவுமே அவரை சூப்பர் ஸ்டார் ஆக தலையில் வைத்து கொண்டாடி வருகின்றது.

அதனால் நாமும் ஏன் சூப்பர் ஸ்டாராக கூடாது என்ற ஆசையில் பல நடிகர்கள் உள்ளே வருகிறார்கள். ஆனால் இங்கு இருக்கும் ஒரே சிக்கல் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒரே ஆள் தான். அந்த டைட்டிலுக்கு வேண்டுமென்றால் சண்டை போடலாம் .ஆனால் சூப்பர் ஸ்டார் என்றால் ஒரே ஒரு ஆள் தான். ரஜினிக்கு முந்தைய கால நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி இவர்களை எடுத்துக் கொண்டால் ஒரு தனித்துவமான நடிப்பு இருக்கும்.


ரஜினி காலத்தில் வந்த நடிகர்களாக பார்க்கும் பொழுது கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் இவர்கள் அவரவர் நடிப்பை வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரஜினிக்கு பிறகு அதாவது 90 க்கு பிறகு வந்த நடிகர்களுக்கு அது ஒரு சாபக்கேடான காலம் என்று கூறலாம். ஏனெனில் 90களில் நடிக்க வந்த நடிகர்கள் யாரை எடுத்தாலும் அவர்களில் ரஜினியின் சாயல் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.

அது விஜய் ஆகட்டும் அஜித் ஆகட்டும் எந்த நடிகர்களாகட்டும் ஆரம்பத்தில் விஜயையே ரஜினியின் அண்ணாமலை வசனத்தை பேசி தான் வாய்ப்பே கேட்டார். அதைப்போல நாளைய தீர்ப்பு படத்தில் கூட ரஜினியின் சாயலை ஒத்து இல்லை என்றாலும் அவருடைய ஸ்டைலை பின்பற்றி தான் அந்த படத்தில் நடித்திருப்பார் விஜய். இப்படி பெரும்பாலான நடிகர்கள் ரஜினியின் சாயலை பின்பற்றி தான் நடிக்க வந்தார்கள்.

இதிலிருந்து தப்பி வந்த ஒரு சில நடிகர்கள்தான் விஜய் அஜித் இவர்கள். ஆனால் பெரும்பாலான நடிகர்கள் இந்த ஒரு காரணங்களினால் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். அதில் பரத், ஸ்ரீகாந்த், ஷியாம் ,ஜீவா சமீபத்தில் ஜெயம் ரவியையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம். இந்த நடிகர்கள் அனைவரும் முதலில் சினிமாவிற்குள் நுழையும் போது பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக தான் ரசிகர்கள் இடையே ஜொலித்தனர்.

இவர்கள் நடித்த ஒரு சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. ஸ்ரீகாந்தின் முதல் படமான ரோஜாக்கூட்டம். எப்பேர்ப்பட்ட வெற்றியை பெற்றது. பரத் நடிப்பில் வெளிவந்த காதல் திரைப்படம் .அனைவரையும் கண்கலங்க வைத்தது .ஜெயம் ரவி படங்களை சொல்லவே வேண்டாம். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஷியாம் நடித்த 12பி திரைப்படம். மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஜீவா நடிப்பில் கோ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை பெற்றது .

ஆனால் இவர்கள் எல்லாம் இன்று எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என அனைவருக்குமே தெரியும். எத்தனையோ புதுமுக நடிகர்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால் இப்போது நடிகர்களை தாண்டி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் யார் வேண்டுமென்றாலும் நடிக்கலாம். கடைசியில் கதைதான் பேசும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

Next Story