Categories: Cinema News latest news

ஏமாத்திய எல்லா ஹீரோக்களும் பல்ப்பா..? தமிழ் சினிமாவில் இந்த இடத்திற்கு வெற்றிடம்.. ப்ளூசட்டை மாறன் சாட்டையடி..!

Bluesattai Maran: தமிழ் சினிமா பிரபலங்களும் தற்போது சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் பிரபல திரைவிமர்சகர் ப்ளூசட்டை மாறன். கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்து வந்தவர். தற்போது ஒரு ஹிட் நாயகனையும் லிஸ்ட்டில் சேர்த்து இருக்கிறார்.

ரிலீஸாகும் எல்லா திரைப்படத்தினையும் மொக்க பண்ணியே நெகட்டிவாக புகழ் பெற்றவர் ப்ளூசட்டை மாறன். ஒரு கட்டத்தில் இவரே ஆண்ட்டி இந்தியன் என்ற படத்தினை இயக்கி ரிலீஸ் பண்ணினார். ஆனால் அப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. 

இதையும் படிங்க: கலைஞர் அந்த நடிகைக்கு செய்த உதவி! அதே போல் முதல்வர் செய்யமாட்டாரா? மனைவிக்காக முறையிட்ட விக்ரமன்

இதையடுத்து மீண்டும் விமர்சனத்திலே தன்னுடைய வழியை திருப்பி இருக்கிறார். அதுமட்டுமல்லாது ட்விட்டரில் கோலிவுட் பிரபலங்களின் முகத்திரையும் கிழித்து தொங்க விட்டு வருகிறார். அந்த வகையில் இமான் பிரச்னையில் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

அதையடுத்து தற்போது வெளியிட்டு இருக்கும் ட்வீட்டில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என பல ஆண்டுகளாக நம்பவைத்த நடிகர்கள். முதலில் விஜய், ஒரு காலத்தில் கில்லி, திருப்பாச்சி என  காதல் படங்களால் பெண்கள் மனதில் இடம் பிடித்தவர். 

இதையும் படிங்க: த்ரிஷாவுக்கு முத்தமெல்லாம் கொடுக்க முடியாது… மறுத்த முன்னணி நடிகர்..! ஆனா படம் சூப்பர்ஹிட்..!

சிவகார்த்திகேயன் உப்புமா பட்ஜெட்டில் எடுத்த ப்ரின்ஸ் மக்களிடம் எடுபடவேவில்லை. மாவீரன் ஓரளவு தப்பித்து வந்தாலும் இமான் சர்ச்சையால் பெண்களிடம் இவரது இமேஜ் ரொம்பவே டேமேஜ் ஆகியுள்ளதாம்‌. இதனால் தற்போதைய நிலையில் கோலிவுட்டில் ‘குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோ’ இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அடுத்து பெண்கள், குழந்தைகளை ஏமாற்ற வரப்போகும் உங்க வீட்டுப்பிள்ளை யாரோ? என ட்வீட்டி இருக்கிறார். 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily