Categories: Cinema News latest news

உங்களுக்கு வேற தலைப்பே கிடைக்கலையா.? டைட்டிலுக்கே பஞ்சாயத்து ஏற்பட்ட திரைப்படங்கள் லிஸ்ட்..

தமிழ் சினிமாவில் தற்போது தலைப்புக்கு தான் பெரும் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த தலைப்பை கேட்டாலும், அது ஏற்கனவே வந்துவிட்டது. அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது என பல பூகம்பங்கள் கிளம்பும். ஏற்கனவே வைக்கப்பட்ட படத்தில் இருந்து எடுத்து வைத்தால், அது அந்த பழைய பட தயாரிப்பாளர் பிரச்சனை எழுப்ப கூடும் அப்படி தான் அண்மையில் மன்மதலீலை படம் ரிலீஸ் ஆவதற்குள் சிக்கியது. பின்னர் எப்படியோ படம் ரிலீஸ் ஆனது.

 

அதனால், தான் தற்போதைய  கோடம்பாக்கத்தினர், புதியதாக ஏதும் பெயர் தேடுவதில்லை, மாறாக ஏற்கனவே வந்த படத்தில் உள்ள புகழ் பெற்ற வசனங்களையே படத்தின் பெயராக மாற்றிவிடுகின்றனர். தலைப்பு கிடைக்காததால், விஜய் கூட மாஸ்டர், பீஸ்ட் என ஆங்கில தலைப்பு பக்கம் சென்றுவிட்டார் போல.

 

தமிழில் இந்த மாதிரியான உல்டா தலைப்பு பல வந்துள்ளன . அதாவது புகழ் பெற்ற படத்தில் இருந்து வந்த புகழ்பெற்ற வசனங்களை தலைப்பாக கொண்ட படங்கள். அதில் சிம்பு அவர் நடித்த செக்க சிவந்த வானம் படத்தில் பேசும் வந்தா ராஜாவா தான் வருவேன் எனும் வசனத்தையே அடுத்த பட தலைப்பாக்கி விட்டார்.

 

ஜிவி பிரகாஷ் இரண்டு முறை அவ்வாறு சிக்கியுள்ளார். ஒன்று வடிவேலு பேசிய திரிஷா இல்லனா நயன்தாரா, ரஜினியின் பேமஸ் வசனமான எனக்கு இன்னோர் பேர் இருக்கு போன்ற தலைப்புகளை என வைத்துளளார். அதே போல நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எனும் எம்,ஜே.ஆர் பாட்டையே படைத்தலைப்பாக மாற்றிவிட்டனர்.

தற்போது ரீசெண்டாக தில்லுக்கு துட்டு இயக்குனர் ராம்பாலா இயக்கும் அடுத்த படத்திற்கு வந்தான் சுட்டான் ரிபீட்டு என மாநாடு பட வசனத்தை வைத்துள்ளார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் தலைப்புக்கு அவளோ பஞ்சம் ஏற்பட்டு விட்டதா என வினாவி வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் – அஜித்தால் நயன்தாரா காட்டில் அடைமழை.! மிரண்டு போயிருக்கும் தயாரிப்பாளர்கள்.!

இதற்கெல்லாம் மேலே பல தலைப்புக்கள் உங்கள் கவனத்திற்கு வராமல் தப்பியிருக்கும் அவற்றில் ஒரு சில சேம்பிள் தலைப்புகள் இதோ, வணக்கம்டா மாப்ள, என் ஆளோட செருப்பை காணோம் , வெள்ளைய இருக்கறவன் பொய் சொல்லமாட்டான், ஏண்டா தலைல என்ன வைக்கல, நாலு பெரு நாலு விதமாக பேசுவாங்க , போங்கடி நீங்களும் உங்க காதலும், யோக்கியன் வாரான் சொம்ப தூக்கி உள்ளவை, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என பேரை கேட்டவுடன் ஒரு நிமிடம் ஜெர்க் ஆக்கும் பெயர்களை இன்னும் தேடி தேடி வைத்து தான் வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan