×

வசூலுக்காக ரசிகர்களிடம் விளையாடும் ’மாஸ்டர்’..கொரோனா அச்சத்தால் திணறும் கோலிவுட்

தியேட்டர்கள் 100% இருக்கைக்கு அனுமதி அளித்திருப்பது ரசிகர்களின் வாழ்க்கையை பணயம் வைப்பதற்கு சமம் என எதிர்ப்பு குரல் வலுக்கத் தொடங்கி இருக்கிறது.  
 
 

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால், திரும்ப மூடப்பட்டன. 
இதனால், படங்கள் வெளியாவதிலும் சிக்கல் நீடித்தது. 


மேலும், தியேட்டர்களில் 100 சதவீதப் பார்வையாளர்களுக்குத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென திரைப்படத் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதே கோரிக்கையுடன் நடிகர் விஜய், மாஸ்டர் தயாரிப்பாளார்களுடன் முதல்வர் எடப்பாடி 
பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். 


மாஸ்டர் படம் தைப் பொங்கலையொட்டி வரும் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தநிலையில், தியேட்டர்களில் 100 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளில் 100 
சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது. உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வரும் சூழலில் தமிழக அரசின் இந்த முடிவு சர்ச்சையாகியிருக்கிறது. நடிகர் விஜய்யைத் திருப்திப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்று அரசியல் ரீதியாகக் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

மறுபுறம் அரசின் இந்த முடிவால் கொரோனா பரவல் அதிகரிக்கக் கூடும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். பொதுசுகாதார நிபுணரான பிரதீப் கவுர், `உரிய சமூக இடைவெளியின்றி காற்றோட்டம் குறைவான இடங்களில் கொரோனா தீவிரமாகப் பரவும். இதனால், அதுபோன்ற இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று எச்சரித்திருந்தார். அதேபோல், நடிகர் அரவிந்த் சாமியும் `சில நேரங்களில் 100 சதவீதத்தை விட 50 சதவீதமே சிறந்தது. இது அதுபோன்ற ஒரு சூழல்’ என்று ட்வீட் தட்டியிருந்தார். திரையரங்குகளில் 100 சதவீதப் பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அரசின் அறிவிப்பால் கொரோனா பரவல் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தையே சுகாதாரத் துறை வல்லுநர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். அரசு இதைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்திருக்கிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News