×

68 பேரைக் கண்காணிப்பில் வைத்துள்ள தமிழக சுகாதாரத்துறை ! அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் !

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 68 பேரைக் கண்காணிப்பில் வைத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 68 பேரைக் கண்காணிப்பில் வைத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் பகுதியிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இதுவரை 3000க்கும் மேற்பட்ட மக்களை தாக்கியுள்ளது. இந்நோய்க்கு மருந்து இல்லாததால் இதுவரை 106 ஆக உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கியதில் 500க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் எனத் தெரிகிறது.

கொரோனா வைரஸ் அபாயம் நிறைந்த பகுதிகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சீனாவில் இருந்து  சென்னைக்கு விமானம் மூலம் வந்த 15000 பேரும் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் 68 பேரைக் கண்காணிப்பில் வைத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதில் 58 பேர் இந்தியர்கள் மற்றும் 10 பேர் சீனர்கள். அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News