Connect with us

Cinema News

இவரு பெரிய டான்.. துப்பாக்கியில சுட்டுத்தான் குழந்தை பாலினத்தை அறிவிப்பாரு!.. வசமா சிக்கிய இர்பான்!

விதவிதமான ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு இது சூப்பரா இருக்கு, இது சுமாரா இருக்கு, இந்த கடையில போய் தாராளமா சாப்பிடுங்க, இந்த கடை பக்கமே போகாதீங்க என்றெல்லாம் யூடியூபில் உணவு குறித்த விமர்சனங்களை சொல்லி யூடியூபில் பிரபலமாக உலா வரும் இர்பான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

ஏற்கனவே இர்பான் கார் மோதி விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது. ஆனால் இர்பான் அந்த காரை ஓட்டி செல்லவில்லை என சொல்லி அந்த வழக்கில் இருந்து வெளியேறி்விட்டார். ஆனால் தற்போது வசமாக இன்னொரு வழக்கில் இர்பான் சிக்கியுள்ளார்.

இதையும் படிங்க: 15 லட்சம் நஷ்டம்!.. இந்நேரம் நான் எங்கே எப்படி இருந்திருக்க வேண்டிய ஆள் தெரியுமா?.. கதறும் கிரண்!..

இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை கேட்கவும் அல்லது வெளிப்படையாக அறிவிக்கவும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் துபாய்க்கு சென்று தனது மனைவிக்கு பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தை தான் என்பதை அறிந்து கொண்டு சமீபத்தில் குடும்பத்தினருடன் சென்னையில் விழா ஒன்றை நடத்தி இர்பான் அறிவித்து அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

தற்போது அதற்கு எதிராக சுகாதாரத்துறை நோட்டீஸ் ஒன்றை இர்பானுக்கு அனுப்பியுள்ளது. மேலும், அவரது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவை டெலிட் செய்ய அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Vishal: ஓடிடிக்கு ஓடி வந்த ரத்னம்… ரிலீஸ் எப்போன்னு பாருங்க!

இந்த விவகாரம் தொடர்பாக இர்பானுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்போதுதான் இது போன்ற குற்றங்களை வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

இது தொடர்பான விளக்கத்தை அளிக்க இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர் செய்தது சட்டத்துக்கு புறம்பான குற்றம் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால், இர்பான் பெரும் சிக்கலுக்கு ஆளாவார் எனக் கூறப்படுகிறது. தனது குழந்தையின் பாலினத்தை அறிவிக்க துப்பாக்கி கலாச்சாரத்தையும் இர்பான் பயன்படுத்தியதாக சோசியல் மீடியாவில் பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அது பொம்மை துப்பாக்கி என்றாலும் அது தவறுதான் என்கின்றனர்.

இதையும் படிங்க: அதுல நம்பிக்கை இல்ல… பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய… விஜே விஷாலின் முதல் பதிவு!

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top