×

தமிழகத்தில் தீராத கொரோனா... ஒரேநாளில் 6 ஆயிரம் பேர் பாதிப்பு.. 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை குறைந்த பாடில்லை. ஊரடங்கு, முழு ஊரடங்கு, கடையடைப்பு, விதிமுறைகள் என அரசு பல நடவடிக்கைகள் எடுத்தும் கொரோனா குறைந்த பாடில்லை.
 

தமிழகத்தில் இன்று மட்டும் 5995 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரேநாளில் 101 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 6,430 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 5,764 பேர் கொரொனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிகிச்சையில் குணமடைந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். எனவே, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,07,677 ஆக அதிகரித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,757 ஆக உயர்ந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News