×

நாட்டிலேயே சிறந்த மருத்துவ மாநிலம் தமிழம் - முதல்வர் எடப்பாடிக்கு குவியும் பாராட்டு!

தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ மாநிலமாக திகழ்கிறது.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார். இந்த கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் முதல்வர் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து பல்வேறு மருத்துவ நலதிட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

அண்மையில் கூட கொரோனா வைரஸ் தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசு செலவில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என உறுதியளித்தார். இதுபோன்று தொடர்ந்து மருத்துவத்துறையில் முன்னோடியாக இருந்து வரும் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ மாநிலமாக சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வடபழனியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 99% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது என்று தெரிவித்தார். காரணம் நாட்டிலேயே இங்கு தான் பிரசவத்திற்காக  ரூ. 18,000  வழங்கப்படுகிறது.

எனவே தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அதிலும் தாய்-சேய் இறப்பு விகிதம் பல மடங்கு குறைக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு தமிழகம் மருத்துவத்துறையில் தொடர்ந்து முன்னோடியாக இருக்கிறது என கூறினார். முதல்வரின் இந்த சிறப்பான செயல்களை பலதரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News