×

திரையரங்குகளை முதலில் தமிழ்நாடுதான் திறக்கும்… கடம்பூர் ராஜு சூசகப் பதில்!

கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு 6 மாதத்துக்கு மேலாகிறது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டத்தை திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் அனுபவித்து வருகின்றனர். அன் லாக்டவுன் என்ற பெயரில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் திரையர்ங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் திரையரங்குகளை திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்க மறுத்துவிட்டன. இந்நிலையில் இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ‘மத்திய அரசு அறிக்கை வெளியிட்டதும், திரையரங்குகளைத் திறக்கும் முதல் மாநிலமாகத் தமிழகம் இருக்கும்’ என உறுதியளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News