×

அன்றும் இன்றும் ரசிகக்கண்மணிகளின் கனவுக்கன்னிகள் இவர்கள்தான்

தமிழ்சினிமா ஹீரோயின் யார் என்று கேட்டுத் தான் படம் பார்க்கவே சிலர் செல்கின்றனர். அவர்களுக்கு ஹீரோவை விட ஹீரோயினே முக்கியம். அந்தளவிற்கு ஒரு அப்பியாசம். கதாநாயகிகளின் கிளுகிளுப்பே இதற்கு காரணம் என்று சொன்னால் அவர்கள் நெளிவார்கள். இதில் கல்யாணம் முடியாத
 
Tamil heroines

தமிழ்சினிமா ஹீரோயின் யார் என்று கேட்டுத் தான் படம் பார்க்கவே சிலர் செல்கின்றனர். அவர்களுக்கு ஹீரோவை விட ஹீரோயினே முக்கியம். அந்தளவிற்கு ஒரு அப்பியாசம். கதாநாயகிகளின் கிளுகிளுப்பே இதற்கு காரணம் என்று சொன்னால் அவர்கள் நெளிவார்கள். இதில் கல்யாணம் முடியாத இளசுகள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் பெருசுகள் இன்னும் ஒரு படி மேலாகத் தான் இருக்கிறார்கள். கவர்ச்சி படம் வந்து விட்டால் போதும். இவர்களுக்கு கொண்டாட்டம்தான். 

அந்தகாலத்து சினிமா கொட்டகைக்குள் மண்ணை அள்ளி கூட்டி வைத்து முன்கூட்டியே அரங்கில் அதகளம் பண்ண ஆரம்பித்துவிடுவர் இந்த பெருசுகள். அது காணாத குறைக்கு சுருட்டைப் பிடித்துக்கொண்டு ஊதித்;தள்ளியும், புகையிலைப் போட்டு |புளிச்... புளிச|; என்று அருகிலேயே துப்பியும், வாயில் வெற்றிலைப் பாக்கு கறை தெரிய பல்லை இளித்துக் கொண்டு பெண்கள் இருக்கை பக்கம் திரும்பி டாவடிக்கும் டகால்டியும,; 'அடடா....இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா..." என்று நம்மை எரிச்சல்பட வைத்து விடும் அந்நாட்களில்...!

keerthi suresh

அப்படி என்னதான் ஹீரோயின்களிடம் உள்ளது என்றால், நளினம்தான். கொஞ்சம் கவர்ச்சி, அதிக வெட்கம், ஆடை அணிகலன்களுடன் அலங்காரம். பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் எடுக்கும் தனித்திறன், மாமியார் மருமகளிடம் எப்படி நடக்க வேண்டும்? மருமகள் மாமியாரிடம் எப்படி நடக்க வேண்டும்? தலைவன் தலைவியிடம் எப்படி நடக்க வேண்டும் என மென்மையாக சொல்லித் தரும் தலைவி, தலைவனிடம் தன் பிரயாசையைத் தெரிவிக்கும் விதம் என்று எக்கச்சக்கமான அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. 

இதில் காதல், சோகம், பாசம், நகைச்சுவை, நாட்டியம், வறுமை, வெட்கம், ஏளனம் என நவரசங்களும் கலந்து கதாநாயகிகள் நமக்கு விருந்து படைக்கின்றனர். அதனால் தான் கதாநாயகிகள் என்றால் அவ்வளவு பேரு. கதாநாயகிகளை வைத்து மட்டும் ஓடிய படங்களும் உண்டு. தாய்க்குலங்கள் பெரும்பாலும் யார் கதாநாயகி என்று பார்த்து தான் படம் பார்க்க வருவர். ஆனால் தற்போது இந்த நிலை மாறிவிட்டது. எல்லாவற்றையும் மொபைலிலேயே பார்த்து அலசி ஆராய்ந்து விட்டுதான் திரையரங்கு பக்கமே வருகின்றனர். 

rashi kanna

தமிழ்சினிமாவில் முதல் ரசிகர் மன்றம் அமைந்தது யாருக்கு தெரியுமா? தமிழ்படத்;தின் முதல் பேசும்படமான காளிதாஸ் பட கதாநாயகி டி.பி.ராஜலெட்சுமிக்குத் தான் என்றால் ஆச்சரியமான விஷயம்தான். ஒரு கதாநாயகனுக்குக்கூட இல்லாத அளவில் கதாநாயகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார் என்பதே இந்த நிகழ்வுக்கு காரணகர்த்தாவாக அமைகிறது. அந்தளவிற்கு அவரிடம் நடிப்பு, நடனம், பாடும் திறன் என நவரசங்களும் கொட்டிக்கிடந்தன. அதைத் தொடர்ந்து வந்த நடிகைகளும் பலர் இதுபோன்ற திறமைகளைப் பெற்றிருந்தனர். 

பண்டையகால நடிகைகள்

கண்ணாம்பாள், சாவித்ரி, சரோஜாதேவி, லலிதாகுமாரி, ராகினி, அஞ்சலிதேவி, பத்மினி, லலிதா, தேவிகா, ஜெயலலிதா, சவுகார் ஜானகி, பானுமதி, எம்.என்.ராஜம், கே.ஆர்.விஜயா. மஞ்சுளா, லதா, சுலோச்சனா, வெண்ணிற ஆடை நிர்மலா

இடைக்கால நடிகைகள்
 
சில்க், டிம்பிள் கபாடியா, ராதா, அம்பிகா, ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஸ்ரீவித்யா, அமலா, ரேகா, ரேவதி, மந்த்ரா, நக்மா, நதியா, ஊர்வசி, ராதிகா, நிரோஷா, பானுப்பிரியா, மாதவி, தீபா, டிஸ்கோ சாந்தி, குஷ்ப10, விந்தியா, விமலாராமன், மீனா, வினிதா, கனகா, நளின,p நந்தினி, வைஷ்ணவி, ப10ர்ணிமா ஜெயராம்.

நேற்றைய நாயகிகள் 

ரம்பா, நக்மா, ஜோதிகா, கவுசல்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், தபு, சிம்ரன், லைலா, சினேகா, கஸ்தூரி, தேவயானி, ப10ஜாபட், சங்கவி, பல்லவி, அனுராதா, சங்கீதா, பிரியாராமன், நமீதா, அசின், திரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, டாப்ஸி, ப10மிகா, சதா, காயத்ரி ரகுராம், காயத்ரி ஜெயராம், ஷில்பா ஷெட்டிஇவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அதாவது 90களில் கொடிகட்டி பறந்தார்கள்.

இன்றைய நாயகிகளில்  அஞ்சலி, காஜல் அகர்வால், ஆண்ட்ரியா, நஸ்ரியா, தமன்னா, அனுஷ்கா, யாஷிகா, சுருதி, அக்ஷயா, ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ்;, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா மேனன், வேதிகா,  பார்வதிநாயர், ராய்லஷ்மி, சாக்ஷி அகர்வால், சாய்பல்லவி, நித்யா மேனன், நிக்கி கல்ராணி, கீர்த்தி சுரேஷ்;, ராஷி கண்ணா, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் குறிப்பிட தக்க ரசிகர்களை தக்கவைத்துள்ளனர்.

இவர்களில் 90களில் வந்த நயன்தாரா, திரிஷா, தபு, கவுசல்யா, கனகா, சதா, லட்சுமி கோபாலசுவாமி ஆகிய நடிகைகள் இன்னும் திருமணமே ஆகாமல் உள்ளனர்.


பின்னாளில் குஷ்புவுக்கு கோயில் கட்டிய வரலாறும் உண்டு. அட அவரது பெயரில் இட்லிகூட பிரபலமானது உங்களுக்குத் தெரிந்த விஷயம்தான். 

அன்றைய நடிகைகளில் பெரும்பாலானோருக்கு நடிப்பு, நடனம், பாடல் பாடுவது என அனைத்திலும் தனித்திறன்கள் பெற்றிருந்தனர். தற்போது நடிப்பு மட்டும் தான், கொஞ்சம் நடனம். அதுவும் பேசுவதற்கு கூட தெரியாது. டப்பிங் தான். இவர்கள் கவர்ச்சியை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ளனர். அக்காலத்து நாயகிகள் கதையை நம்பியே களம் கண்டு பல வெற்றிகளைக் குவித்தனர். நீண்ட பேரும் புகழையும் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் யார் என்றே தெரிவதில்லை. அவர்கள் வருவார்கள் போவார்கள் என்ற கதையாகத் தான் உள்ளது. தினம் ஒரு அறிமுகம்...என்னும் அளவில் திரைப்படத்தில் புதுப்புது கதாநாயகிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் பெயர் கூட வாய்க்குள் நுழையாதபடி தான் உள்ளது. இதைத்தான் அன்றே சொன்னார்கள் நம்மவர்கள் குப்பையில் கிடந்தாலும் குன்றின்மணி நிறம் மாறுமா என்று..!

From around the web

Trending Videos

Tamilnadu News