×

பழனிச்சாமி தாத்தா கொடுத்தார்!... குழந்தைகளையும் கவர்ந்த முதல்வர்(வீடியோ)...

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மக்களுக்கு சிறந்த நல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.

குறிப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு பொருட்களை வழங்க அவர் உத்தரவிட்டது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வரும் மக்கள் தங்களின் பொங்கல் செலவிற்கு இப்படம் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை துவங்கியுள்ளன. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வரும் பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஏனெனில், பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்து வருகிறார்.  மேலும், அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை எடுத்துரைத்து அவர் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

2 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறிய நிலையில் நான்கரை வருடங்களாக சிறப்பாக ஆட்சி செய்துள்ளார் பழனிச்சாமி. அதோடு, அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாகவும் மாறியுள்ளார். தனது அணுகுமுறையால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் அவரை அனைவரையும் கவர்ந்து வருகிறார். 

இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில், பொங்கல் பரிசாக வாங்கிய கரும்பை ஒரு குழந்தை உரித்துக்கொண்டிருக்கிறது. அப்போது இதை யார் கொடுத்தா? அக்குழந்தையின் அம்மா கேட்க ‘பழனிச்சாமி தாத்தா கொடுத்தார்’ என அந்த குழந்தை அழகாக பதில் சொல்கிறது. இது யார் கொடுத்தா? என மீண்டும் அவர் கேட்க, அந்த குழந்தை ‘பழனிச்சாமி தாத்தான் கொடுத்தார்’ என அழுத்தமாக பதில் கூறுகிறது. இதை வைத்து பார்க்கும் போது முதல்வர் பழனிச்சாமி தனது திட்டங்களால் குழந்தைகளையும் கவர்ந்து வருகிறார் என்பதுதான். 

From around the web

Trending Videos

Tamilnadu News