ரூட் மாஃபியாவை ஒழிக்கணும்… பிக்பாஸ் தமிழ் புகழ் நடிகையால் வெடிக்கும் சர்ச்சை!

 
ரூட் மாஃபியாவை ஒழிக்கணும்… பிக்பாஸ் தமிழ் புகழ் நடிகையால் வெடிக்கும் சர்ச்சை!

தமிழ் சினிமா நடிகைகளுக்கு திடீரென தைரியம் வந்திருப்பதே பெரிய ஆச்சரியமான விஷயமாக மாறி இருக்கிறது. அந்த வகையில் பிரபல தமிழ் பிக்பாஸில் ஒரு நடிகையின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு கவனம் ஈர்த்துள்ளது. 

விஜயின் தனிப்பட்ட மேனேஜர் தான் ஜெயகதீஷ் பழனிச்சாமி. இவர் ரூட் நிறுவனத்தினை தொடங்கி விஜய் போன்று பல பிரபலங்களின் புரோமோஷன் மற்றும் சினிமா வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார். அதனால் இவருக்கு கோலிவுட்டில் தனி கவனம் இருந்தது. 

நடிகைகளின் மேனேஜராக மட்டுமல்லாமது பல படங்களையும் தயாரித்து இருக்கிறார். இவர் தான் கீர்த்தி சுரேஷுக்கும் மேனேஜர். அந்த வகையில் நடிகை பிரியங்கா மோகனுக்கும் மேனேஜராக இருந்தது ரூட். ஆனால் அவர் திடீரென வெளியேறினார். அதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அவர் மீதான அவதூறுகள் அதிகமாக பகிரப்பட்டது. 

ரூட் மாஃபியாவை ஒழிக்கணும்… பிக்பாஸ் தமிழ் புகழ் நடிகையால் வெடிக்கும் சர்ச்சை!

தன்னுடைய டீமில் இருந்து வெளியேறும் நடிகைகளின் கேரியரையே ரூட் காலி செய்வதாகவும் பல முறை கண்டனங்கள் எழுந்து இருக்கிறது. இந்நிலையில் பிரபல தமிழ் நடிகை ஓவியா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரூட் மாஃபியா கெட் எக்ஸ்போஸ்டு என பதிவிட்டு இருக்கிறார். 

விஜய் தற்போது தமிழக முதல்வராக பதவியேற்று இருக்கும் நிலையில் அவரின் ஆஸ்தான மேனேஜருக்கு எதிராக ஒரு நடிகை சொல்லி இருக்கும் குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது. இதற்கும் விஜய் தரப்பு வாய் திறக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம். 

From Around the web