×

நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் - முதல்வரின் சாதனைக்கு மகுடம்

 

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. கல்வி, விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழகத்தின் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களின் தேசிய விருது பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சாதனை ஆகும். குறிப்பாக தென்னிந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்பிக்க செய்ததில் சிறந்த மாவட்டங்களாக வேலூர் மற்றும் கரூர் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெருமை முழுக்க முழுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையே சாரும். அதேபோல், தென்னிந்தியாவில் நீர் நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு நன்மை தரும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இது மேலும் மகுடத்தை சேர்த்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News