×

இந்தியாவிலேயே 2வது இடம் - முதல்வரின் ஆளுமைக்கு அடையாளம்

 

இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகங்களை அளிக்கும்  மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை கேரளா மாநிலம் பிடித்துள்ளது.

இந்த கருத்தாய்வு பெங்களூரை சேர்ந்த பிரபல Public Affairs Centre-ன் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் எடுக்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் ISRO சேர்மன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்து ஆய்வு மிகவும் துல்லியமாகவும், நம்பகத்தன்மை பெற்ற ஒன்றாகும்.

இந்த பெருமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே சாரும் என்பதால் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த கருத்தாய்வு வளர்ச்சி, சமநிலை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக செயல்திறன் ஆகியவற்றின் பின்னணியிலும் எடுக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக அதிமுக அரசின் செயல்பாடு பற்றி எதிர்கட்சியான திமுக பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகிறது. ஆனால், இந்த ஆய்வு முடிவின் மூலம் அவர்களின் பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “தமிழகத்தின் ஆட்சி முறைக்கான இந்த பாராட்டுக்கள், தமிழக வளர்ச்சிக்காக நாம் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் வெளிப்பாடே” என் தெரிவித்துள்ளார்.

மேலும், “நமது மாநிலத்தை இந்தியாவில் மிகச் சிறந்த மாநிலமாகக் கொண்டு செல்வதற்காக  நாம் அனைவரும் கடினமாக உழைத்து, ஒன்றிணைந்து செயல்படுவோம்” எனவும் கூறியுள்ளார். 

கொரோனா உள்ளிட்ட பல நெருக்கடிகளை மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் ஆட்சி முறையை பாராட்டி வெளியாகியுள்ள இந்த கருத்தாய்வு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதையும், அவர் மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக திகழ்கிறார் என்பதோடு, ஒரு மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர் என்பதையும் உணர்த்துகிறது.   

From around the web

Trending Videos

Tamilnadu News